பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 2 # 9 பற்றிப் பொருளிலக்கணங் கூறுவலென்றலும், பெரும்பான்மை இலக்கண வழக்கென்ப என்றலும், அதனானே சிறுபான்மையை மயக்கமென்றலும், அம் ஆம் எம் ஏம் என்பன முதலாயவற்றை அங்ங்ணம் பகுத்தோதுதற்பயனும், அவை வினையின்றி அவ் வினை செய்தான்மேல் நிகழ்கின்ற கூறாதலுமே பற்றி, வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவம்’

  • (தொல்-சொல்-இடை 2) என்று இடைச்சொல்லோடு ஒதுதலும் போல்வன அதற்கு இனமெனப்படும்; என்னை? இவைதாங் கூறுவலென்று புகுந்த வற்றுள்ளும் ஒரு பொருளானவற்றை வரைந்து கொண்டமையின் அவற்றுள் விரியெனப்பட்டன.

(12) முறைபிறழாமை - காரணமின்றித் தான் சில பொருள் எண்ணி நிறுத்தியபின்னர் அம்முறை பிறழ்ந்தாலுங் குற்றமில்வழியும் அம் முறையினையே இலக்கணமாகச் சொல்லு தல் அது. ' பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி யென்னு மீற்ற’ (தொல்-சொல்-வேற் : 3) என நிறுத்தமுறையாற்பற்றி எழுவாய்வேற்றுமை இரண்டாவது மூன்றாவதெனப் பெயர்கொடுத்தல். " அகரமுத னகர விறுவாய்' (தொல்-எழுத்-நூன் : 1) என வுங், ' கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் ' (தொல்-அகத் : 1) எனவும், வழக்கியலானும் இலக்கண வகையானும் உள்பொருளை விதந்தே எண்ணி நிறுத்தாத வழியும், 'அவற்றுள், 'இ 22- 57' ஒ پانویه எனவும், 'அவற்றுள் நடுவணைந்திணை நடுவண தொழிய’ (தொல்-அகத்:2) எனவும் முறைபிறழாமற் கோடல் அதற்கு இனமெனப்படும்