பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தொல்காப்பியம் பல்லோர் படர்க்கை முன்னிலை தன் மை ’ (தொல்-சொல்-வினை : 30) என வருகின்றதனை நோக்கித், " தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார் ’’ (தொல்-சொல்-கிளவி : 43) என வழுவமைத்தலும் போல்வன. இனி, ஒரு சூத்திரத்துள்ளே, ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் ' (தொல்-எழுத்-தொகை : 19) என வருவதனை நோக்கிக் கூறிய, ' குற்றொற் றிரட்ட வில்லை ' தொல்-எழுத்-தொகை : 19) என்றல் அதற்கு இனமெனப்படும். (16) மொழிவாமென்றல் - ஒரு பயனோக்கி முற்கூறுது மென்றல்; அவை, - 3 * உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் (தொல்-எழுத்-மொ : 2) எனவும், ' கடப்பா டறிந்த புணரிய லான ’’ (தொல்-எழுத்-மொழி : 4) எனவும், அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப ’’ (தொல்-சொல்.விளி : 2) எனவும் வரும். இங்ங்னங் கூறியதனாற் பயன் : குற்றுகர வீற்றுக்கனன்றிப் புணர்மொழிக் குற்றிகர மின்றென்பது உம், இனிப் புணர்மொழிக் குற்றிகரம் பெருவரவிற்றென்பது உம் அறிவித்தலாயிற்று. அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப ' என்பதுTஉம்,