பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 袋窝3

  • அவ்விளியேலா என்றது உம் அவ்விளியிலக்கண மென் றற் பயம் பட வந்தது.

ஈற்றுப் பொதுவினால் விளியேற்குமென்று ஒதப்பட்ட பெயருள் இவை விளியேலாவென விளிவிலக்கல் வேண்டுதலா னும், நீ வாராயென்பது இயல்புவிளியன்றென விலக்குதலும் விளியிலக்கணமே யாதலானு மென்பது. இனி, ' மெய்பெறக் கிளந்து பொருள் வரைந் திசைக்கு மைகார வேற்றுமைத் திரிபென மொழிப' எனவும், ' மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் வளுநம வென்னு மொற்றா கும்மே” (தொல்-எழுத்-தொகை : 1) எனவும் வருவன அதன்பாற்படும்; என்னை? அவையும் முன்னர்ப் போய் மொழிவனவற்றை அவாவி நின்றமையி னென்பது. 17) கூறிற்றென்றல்-முற்கூறியதோர் இலக்கணத்தினை மற்றொரு பொருட்கும் விதிக்கவேண்டிய வழி, அவ்விலக்கணத் தினை மீட்டுங் கூறாது மேற்கூறியவாற்றானே கொள்கவென் பான் அவை கூறினாமென்று நெகிழ்ந்து போதல் அவை, " கைக்கிளை முதலா வெழுபெருந் திணையு முற்கிளந் தனவே முறைநெறி வகையின்’ - (தொல்-செய் : 185) எனவும், ‘' எண்வகை யியனெறி பிழையாதாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே" (தொல்-செய் : 205) எனவும் வரும். இவை அகப்பொருட்கும் புறப்பொருட்கும் ஒதிய இலக்கணஞ் செய்யுளுள்ளும் அவ்வாறெய்துவித்த வாறாயிற்று.

  • ' ஏனை உயிரே உயர்திணை மருங்கில்

தாம்விளி கொள்ளா என்மனார் புலவர் (தொல்-சொல்-விளி : 1) 3 *