பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலரவியல் பேராசிரியம் : (இ-ன்) மேற்கூறிய ஐந்தினையுங் குட்டியென்றும் பற ழென்றுங் கூறுதல் வரையார் (எ-து). அவை நாய்க்குட்டி 2யன்றிக்குட்டி புேலிக்குட்டி முேயற்குட்டி நேரிக்குட்டி என வழக்கினுள் வந்தன. - பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த வுண்ணாப் பிணவி னுயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய் (அகம் : 335) எனவும், ' வயநா யெறிந்து வன்பநழ் தழீஇ தறுகட் பன்றி" (அகம் : 248) எனவும், புலிப்பற ழன்ன பூஞ்சினை வேங்கை' எனவும், ' பதவுமேயல் பற்றி முயற்பற ழோம்புஞ் சீறு ரோளே நன்னுதல்' எனவும், நரிப்பறழ் கவர நாய்முதல் சுரக்கும்’ எனவும் முறையானே வந்தன. நாயெனச், செந்நாய், நீர்நாய் முதலாயினவும் அடங்கு மென்பது. மூவரியணிலென்றவழிச்(561)* சொல்லப்பட்டவாறும் உய்த்துணர்க. பிறவும் அன்ன. ஆய்வுரை : இஃது, எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட நாய், பன்றி, புலி, முயல், நரி என்னும் ஐந்தினையும் அவ்விடத்துக் குட்டி, பறழ் என்னும் இளமைப்பெயராற் கூறுதலை விலக்கார் ஆசிரியர் எ-று.

  • இந்த எண் தொல்காப்பியம்மூலம் முழுமையையும் குறிக்கும் வரிசையில் அமைந்த நூற்பா எண்ணாம். அது மரபியல் 6-ஆம் நூற்பாவைக் குறிக்கும்.