பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தொல்காப்பியம் எனக் கருவியோத்தினுட் சாரியை மகரம் பகரவருமொழிக்கண் திரியாதென்று போய்ச் செய்கையுள் வல்லெழுத்தினது இயற்கை மெல்லெழுத்தாதல் அறிவித்தற்கு அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகு"மெனச் சொல்லுதல் போல்வன. ங்ளுந ஆதற்கும் இஃதொக்கும். "ஒம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர்' (தொல்-சொல்-உரிச் 98) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். மற்றுத் தன்கோட்கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், அது தந்திரஞ்செய்யும் பகுதிக்கண்ணது; இஃது அன்னதன்றிப் புணர்ச்சிக்கட் சிறப்புடைய நிலைமொழி வருமொழிக்குத் திரிபுபோலாதென்று கருவியாகிய இடைச் சொற்காயின் இத்துணை யமையுமென்று ஆணை செய்தலின் அப்பெயர்த்தாயிற்று. (22) பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் - ஒரு சூத்திரத்துட் பயந்த சொற்றொடர் பலபொருட் கேற்றதாயினும் நல்லது கொள்கின் றாரெனக் கருதி அவ்வாறு செய்தல்: அவை, ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை' (தொல்-சொல்-பெய : 37) என்றவழி, ஒருவரென்பதொரு சொல் தன்கண்ணே இரு பாலா ரையுந் தழிஇ நிற்குமெனவும், அது கருவியாக இருபாலாரையுஞ் சொல்லப்படுமெனவும் கவர்ந்தவழி, 'தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்' (தொல்-சொல்-பெய 38) என்பதனோடு படுத்துநோக்க இருபாலாரையும் ஒருசொல் தன் கட்டழிஇ நிற்றலே நல்லதென்று கொள்ளவைத்தல். 'தும்மெ னிறுதி யியற்கை யாகும்' (தொல்-எழுத்-உரு 15) என்புழி, எழுத்து விகாரமுடையதனைக் களைந்து சாரியைக் கண்ணே இயற்கை கோடலும் அதன்பாற்படும். இதனை ஏற்புழிக் கோடலெனவும் ஒருபுடைச் சேறலெனவுஞ் சொல்லுடி.