பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 爱之? (23) தொகுத்தமொழியான் வகுத்தனர் கோடல்-ஒரு வாய்பாடு எடுத்தோதப் பலவாய்பாடு அதற்கு வந்து ஆஇ மென்று வகுத்துக் கொள்ளவைத்தல் : அது, 'செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின் செயச் செயற்கென வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி' (தொல்-சொல்-வினை 31) எனவும், 'காப்பி னோப்பி னுர்தியி னிழையின்' (தொல்-சொல்-வேற் 11) எனவும் ஒரு வாய்பாடு தொகுத்து ஒதியவாற்றானே பல வாய் பாடு வகுத்துக் கொள்ள வைப்பதென்பது. செய்தென்பதனை நக்கு வந்து கண்டு நின்று பாடிப் போய் எனப் பலவாக்கு தலும் முற்றுவாய்பாடு பலவுமாக்குதலும், இனிக் காப்பி' னென்றவழிப் "புரத்தல் புறந்தர லோம்புதல் போற்றல்' எனப் பலவாக வகுத்தலுங் கண்டுகொள்க. 'உருவென மொழியினும்’ (தொல்-சொல்-கிளவி : 24) என்றலும், 'இதன திதுவிற்று' (தொல்-சொல்-வேற்-ம : 27) என்றலும் போல்வன அதற்கு இனமெனப்படும். (24) மறுதலைசிதைத்துத் தன்றுணிபுரைத்தல்- ஒரு பொருளினை ஒருவன் வேறுபடக்கொள்வதோர் உணர்வு தோன்றியக்கால் அவ் வேறுபாட்டினை மாற்றித் தான் துணிந்த வாறு அவற்கும் அறிவுறுத்தல். இது மறுதலை சிதைத்தலுடை மையின் வாளாது தன்கோட் கூறலின் அடங்காதாயிற்று. 'மூவள பிசைத்த லோரெழுத் தின்றே’ (தொல்-எழுத் நூன் : 5) எனவும்,

  • நீட்டம் வேண்டி னவ்வள புடைய'

(தொல்-எழுத்-நூன் : 6) எனவும்,