பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 芝29 அள பிற் கோட லந்தணர் மறைத்து' (தொல்-எழுத்-பிறப் : 20) என்பது அதற்கு இனமெனப்படும். என்னை? அவர் மதம் பற்றி இவர் கொள்வதொரு பயனின்றாகலி னென்பது. (23) அறியா துடம்படல் - தானோதிய இலக்கணத்தின் வேறுபடவருவன தான் அறிந்திலானாகக் கூறி அதன்புறத்துச் செய்வதொரு புறனடை, அவை ' கிளந்த வல்ல வேறு பிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே' (தொல்-சொல்-வேற்-ம : 35) எனவும், ' வருவ வுள வெனினும் வந்தவற் றியலாற் றிரிவின்றி முடித்த றெள்ளியோர் கடனே’’ - (தொல்-செய் : 243) எனவும் வரும். இறந்தது காத்தலோடு இதனிடை வேற்றுமையென்னை யெனின், இறந்ததென்பது தான் துணிந்து சொல்லப்பட்ட பொருளாகல் வேண்டும். இஃது அன்னதன்றிச் சொல்லப்படாத பொருண்மேற்றாகி அதுவுந் தான் துணியப்படாத பொருளாகித் தான் நூல்செய்த காலத்தே உள்ளவற்றுள் ஒழியப்போயின உளவாயினுங் கொள்கவென்பான், வேறுபிற தோன்றினும் எனவும்; வருபவுளவெனினும் எனவுந் தேறாது அதன் ஐயப்பாடு தோன்றச் சொல்லுதலின் இது வேறென்க. முழுதுணர்ந்தாற் கல்லது பழுதறச் சொல்லலாகாமையின் அஃது அவையடக் கியல் போல்வதோர் உத்தியெனக் கொள்க. ' குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டது மறியத் தோன்றிய நெறியிய லென்ப' (தொல்-எழுத்-தொகை : 18) எனவும், செல்வழி யறிதல் வழக்கத் தான’’ (தொல்-எழுத்-புள் : 17) எனவும் வருவன அதற்கு இனமென வுணர்க. (பாடம்) அளவிறந்திசைத்தலும்’