பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之器蒙 தொல்காப்பியம் ' நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலும்' (தொல்-எழுத்-தொகை : 18). என்புழித் தொடர்மொழியை நெட்டெழுத்தாக்கிக் கோடலும் அது. (31) ஆாடகங்கூறல் - சூத்திரஞ் செய்யுங்கால் அதற்கு ஒதிய இலக்கண வகையானே சில்வகையெழுத்தின் செய்யுட் டாகவும் நாடுதலின்றிப் பொருணனி விளங்கவுஞ் செய்யாது அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து மற்றும் அதனானே வேறு பல பொருளுணர்த்தல்; அது, 'மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ...உணர்திசி னோரே' (தொல்-செய் ! 101) என வருதல். இதனாற்கொண்ட பொருண்மையெல்லாஞ் செய்யு ளியலுட் காட்டப்பட்டன. 'எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே” (தொல்-எழுத்-புண : 26) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும் , பிறவும் அன்ன (32) உய்த்துக்கொண்டுணர்தல்-ஒருவழி ஒரு பொருள் சொல்லியக்கால் அதன்கண்ணே மற்றொரு பொருளினையுங் கொணர்ந்து கொண்டறியுமாறு தோன்றச்செய்தல் : அவை; 'நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யிற்றுங் குற்றிய லுகரம் வல்லா றுார்ந்தே" (தொல்-எழுத்-மொழி:3) என இடனும் பற்றுக்கோடும் கூறி அதனான் ஈறு ஆக்கங் கோடலுங், 'குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்’ (தொல்-எழுத்-மொழி :34) என முதலாக்கங் கூறியதனானே இடனும் பற்றுக்கோடும் அதுவே யெனக் கோடலும் போல்வன. பெயர்வினைக்கு: ஒதிய இலக்கணம் ஒழிந்த சொற்குஞ் செவ்வனஞ் செல்லுமென்று கோடல் அதற்கு இனமெனப்படும் பிறுவும் ஆன் ஐ.