பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 233 மற்று துதலியதறிதலொடு இதனிடை வேற்றுமையெ ன்னை யெனின், அது வாளாது பயமில கூறியதுபோலக் கூறியவழி இவ்வாறு கூறியது இன்ன கருத்துப் போலுமென்று அறியவைத் தலும், உரைவகையானும் துகலியதறியச் சொல்லுதலுமாம்: இஃது அன்னதன்றி அச்சூத்திரத் தன்னான் ஒருபொருள் பயந்த தன்றலையும் பின்னொருபொருள் பெறவருதலின் இது வேறென்பது. மற்று ஞாபகங் கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின்,-பயமில்லது போலவும் அரிதும் பெரிதுமாகவும் இயற்றி எளிதுஞ் சிறிதுமாக இயற்றாது சூத்திரஞ் செய்தல் வேறுபாடே நிமித்தமாகத் தோன்றிக் கொள்வதொரு பொருள் பெற வைத் தலின் இதுவும் வேறெனப்படுமென்பது. மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்லபிற அவண் வரினும் உய்த்துக்கொண்டுணர்தலொடு மேற்கூறிய முப்பத் திரண்டும் இச்சூத்திரத்துள் எடுத்தோதிய பொருள்வகையான் ஆராய்ந்து சொல்லப்பட்டனவன்றே அங்ங்ணஞ் சொல்லாதன பிறவும் இந்நூலுள் வரினும்; சொல்லியவகையாற் சுருங்க நாடி- உத்திவகையென வகுத்துக்கொண்டு ஒதிய முப்பத்திரண்டு பகுதியான் அடங்குமாறு ஆராய்ந்து; மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு-ஒதப்பட்ட உத்தி பலவும் ஒருங்கு வரினும் உள்ளத்தால் தெள்ளிதின் ஆராய்ந்து மயக்கந்திர வேறு வேறு தெரிந்து வாங்கிக்கொண்டு; இனத்தில் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்-முப்பத்திரண்டாகும் ஏற்றவகையான் இனஞ்சார்த்தி மற்றவற்றை இன்னதிதுவெனப் பெயர் கூறல் வேண்டும்; அங்ங்னந் தொகநின்ற வழியும் வேறுவேறு கொண்டு; நுனித்தகு புலவர் கூறிய நூலே-தலைமை சான்ற ஆசிரிய ராற் கூறப்பட்ட நூல் (எ-று), எண்ணிய முப்பத்திரண்டுமல்லன தோன்றினும் அவற்றுள் அடக்கி, அவைதாம் ஒருங்குவரினும் வேறு தெரிந்து இனந் தோறுஞ் சேர்த்துதலை அவாவி நிற்கும் ஈண்டு ஒதிய நூலென்பது கருத்து. சொல்லிய அல்ல பிற அவண் வருமாறும், அவை சொல்லியவகையாற் சுருங்க நாடி இனத்திற் சேர்த்துமாறும் மேற் காட்டப்பட்டன.