பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தொல்காப்பியம் இனி, ஒருங்கு பலவுத்தி வந்தவழி உள்ளத்தால் தெள்ளிதி னெண்ணித்தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்துதல் வருமாறு : 'அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்டல் இயன்ற மருங்கி னெனைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநளிை கடைபிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர்' (தொல்-சொல்-உரி :98) என்றவழி, 'அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன் மறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொல்' என்பது, இறந்தது காத்தலாம்; என்னை? இசையுங் குறிப்பும் பண்புமேயன்றிச் சீர்த்தியும் புனிறும் போல்வன வேறும் உள எடுத்தோகப் பட்டன எனவும், எடுத்தோதாது இசையுங் குறிப்பும் பண்புமன் றிச் சேணென்றுத் தொறுவென்றும் வருவன உளவென்றுங் கூறினமையின். வரம்புதமக் கின்மையின்' என்பது எதிர்பொரு ளுணர்த்தலும் அறியாதுடன்படலுமாம். ஒம்படை யாணை என்பது ஆணை கூறலாம். இங்ங்ணம் ஒரு சூத்திரத்துட் பல வந்தவழி ஒன்றே உத்தியென்றுணராது மனத்தினெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இவ்வாற்றான் இனத்திற் சேர்த்துக என்றான் ஆசிரியனென்பது. ' மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை நிலைய’’ (தொல்-மர. 93, என்பது முதலாக இத்துணையும் வழக்கு நூலிலக்கணங் கூறி னான். எழுநிலத்தெழுந்த செய்யுளின் (476) இதுவும் ஒன்றாக லின் இதனைச் செய்யுளியலிற் கூறினான், ஈண்டு மரபு கூறும் வழி ஒழிந்த செய்யுட்குப் போலாது, நூலிற்குப் பொருட்படை (யாகிய யாப்புக் குற்றங்களும் உத்திவகையுங் கூறல் வேண்டு