பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 235 தலிற் கூறின. னென்பது அங்ங்னங் கூறாக்காற் பாட்டின் மரபு” கட்டுரை போலவுங் கட்டளை அரங்கின்றி வட்டா டியது . போலவும் வரம்பின்றி வேண்டியவாறு நூல் செய்தல் விலக்கின் றாவான் செல்லும்; செல்லவே, எழுசீரானாகிய முடுகியலடியா னும் எத்துணையும் நீண்டதொரு வஞ்சிப்பாட்டானும் பிறவும் வேண்டியவாறுஞ் சூத்திரஞ் செய்தலும், ஒருவன் பெயரினை அவ்வச் சூத்திரச் செய்யுளுட் சார்த்துவகையாற் பெய்து கூற லும், உணர்த்தப்படும் பொருளினை முதனூலுட் கிடந்தவாறு போலாது மரபு நிலை திரியச் செய்தலும், நால்வகை யாப்பொடு மாறுபடச் செய்தலும், வேண்டியவர் வேண்டியவாற்றாற் சில செய்தலும், வேண்டியவர் வேண்டியவாற்றாற் சில பொருள்களை வேறு தோற்றிக்கொண்டு நூல்செய்தலும் விலக்கின்றாகல் படு மென்பது. இனி உத்திவகையும் அவ்வாறே இன்றியமையாதனவெனப் படும். என்னை? உணர்த்தப்படும் பொருள் இதுவென்று அறிவித்தலும், எழுத்துச் சொற்பொருளெனப் பகுத்துக் கொண்டு அதிகாரஞ் செய்தலும், உணர்வு புலங்கொள்ளு மாற் றால் தொகுத்துக் காட்டலும், மற்று அவற்றை வகுத்துக் காட் டியவழிப் பயமில்கூறலென்று கருதாமல் அது தன்னானொரு பயம்படச் செய்தலும், முதனுாலாயின வெல்லாம் நூற்பொரு ளுணர்தற்குக் கருவியாக லுஞ் சூத்திரச்சுருக்கத்துக் கேதுவாகலும் உடைமையின் அவையும் வேண்டப்பட்டன வென்பது. இனி, அவற்றை இத்துணையென வரையறாக்கால் எத் துணையும் பலவாகி இகந்தோடுதலும், வழிநூன் முதனூல் வழித் தன்றாகலும் படும். முப்பத்து மூன்றெழுத் தென்றானாயினும் அப்பெற்றித்தன்றி அறுபத்தாறாகக் கொள்ளவைத்தானென்று உத்திகூறுதலும் உடம்படுவானாதல் செல்லுமென மறுக்க. இனி, ‘' நுனித்தகு புலவர் கூறிய நூல்' என்றதனானே; பாயிரச்செய்யுளுஞ் சூத்திரச்செய்யுளும் ஆசிரியப்பாவும் வெண்பாவும் பெற்று வருதலும், அவ்விரு

  • அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கோளல்' (திருக்குறள் : 410