பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவும் பெற்று வருதலும், பாட்டுப்போல எல்லாவுறுப்பும் பெறுதற்குச் செல்லா வென்பதுTஉம், மாத்திரை முதலாகப் பாவீறாக வந்த பதினொன்றும் வண்ணங்களுள் ஏற்பன கொள் ளினுங் கொள்ளுமெனவும் யாப்புறுப்புக் கொள்ளுங்கால் ஈண் .ோதிய மரபுங்கொள்ளப்படுமெனவுங் கொள்க. உரைக்குங் காண்டிகைக்கும் இவற்றுள்ளும் ஏற்பன அறிந்து கொள்க. இன்னும் துணித்தகு புலவர் என்றதனானே தந்திரமுஞ் சூத்திரமும் விருத்தியுமென மூன்றும் ஒருவரேயன்றி ஒன்று ஒருவர் செய்தலும், இரண்டு செய்தலும் பெறப்படுமென்றலும், ஒருசாலை மாணாக்கருந் தம்மிடை நூல் கேட்ட மாணாக்கரும் பாயிரஞ் செய்யப்பெறுட வென்றலும், பொதுப்பாயிரமுஞ் சிறப்புப் பாயிரமுமென அப்பாயிரந்தாம் இரண்டாமென்றலும், ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுங் கொள்வோன்றன் மையுங் கோடன்மாடிமென்ற நான்குறுப்புடையது பொதுப் பாயிரமென்றலும், அதன்வழியே கூறப்படுஞ் சிறப்புப்பாயிரந் தான் எட்டிலக்கண முடைத்தென்றலும், அவை ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் யாப்பும் நுதலிய பொருளுங் கேட்போரும் பயனு (நன்னூல் : சஎ) மெனப்படு மென்றலும், அவை தாம் நூற்கின்றியமையாவெனக் கொள்ளப் படுதலுங் கூறி முடிக்க. சிறப்புப்பாயிரத்தானே நூலிலக்கணம் ஒரு வகையான் உணரப்படும்; பொதுப்பாயிரத்தானே ஆசிரியரும் மாணாக்கரும் நூலுரைத்தலும் நூல்கேட்டலும் மாசறவறிந்து உரைநடாத்து வாராக அதனானே இவை நூன்முகத்தினின்று நிலாவுமென்பது.

  • ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி

பல்காற் பரவுது மெழுத்தொடு சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே' ஆய்வுரை : இலக்கண நூலாசிரியன் தான்கூற எடுத்துக்கொண்ட பொருளைச் சூத்திரத்தாற் புலப்படுத்த மேற்கொண்

  • தந்திரம் சூத்திரம் விருத்தி மூன்றற்கும்.

முந்துநூ லில்லது முதநூலாகும்’ - (இறையனார் களவியல் முதற் சூத்திரஉரை