பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

骰荔8 தொல்காப்பியம் வாரா ததனால் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே தன்கோட் கூறல் உடம்போடு புணர்த்தல் பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவா மென்றல் கூறிற் றென்றல் தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை முடிந்தது காட்டல் ஆனை கூறல் பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன் றுணி புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடையிடுதல் எதிர்பொரு ளுணர்த்தல் சொல்லி னெச்சம் சொல்லியாங் குணர்த்தல் தந்து புணர்ந் துரைத்தல் ஞாபகங் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே (தொல்-மரபு-ககe) எனவருவது தொல்காப்பிய மரபியலின் இறுதிச் சூத்திரமாகும். இதற்கு இளம்பூரணரும் பேராசிரியரும் சில விடங்களில் வெவ் வேறு பாடங்கொண்டு உரை வரைந்துள்ளனர். இச்சூத்திரத்தில் ஒத்த காட்சி உத்தி என அடை கொடுத் தோதினமையால் முன்னைச் சூத்திரத்திற் கூறப்பட்ட பத்துவகைக் குற்றத்தோடும் ஒத்து நோக்கும் நிலையது உத்தி’ எனவும் உத்தி என்றமையாது உத்திவகை எனத் தெரித்துணர்த்தின மையால் நூலாசிரியன் நுண்ணுணர்வின் திறத்தால் இயல்பாக அமையும் நூற்புணர்ப்பு முறையே உத்தி எனப்படும் எனவும், இந்நூற்பாவில் நுதலியதறிதல் முதலாக எடுத்துரைக்கப்படுவன நூலாசிரியன் தன் கருத்துப்படி செயற்கையாக அமைத்துக் கொள்ளும் முறைமையாதலின் உத்திவகை" எனப்பட்ட என வும், உத்திவகைவிரிப்பின்' எனவே இங்குக் கூறப்படும் உத்தி வகை ஒவ்வொன்றினும் இனமாக அடக்கப்படுவன உள என வும் கொள்வர் பேராசிரியர்,