பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 333 'பத்து வகைக் குற்றத்தோடும் ஒத்துவரும் எனவே இவை நூற்கள் அன்றி ஒழிந்த செய்யுட்கு வருங்கால் விலக்கப்படுதலும், முற்கூறிய குற்றம்போல இவையும் வேறுசில பொருள் படைத் தலுடையவாயின. காட்சி யுத்தி என்று இவற்றைக் கூறியவ தனான் நூலுட் காணப்படும் ஐந்து குற்றத்தோடும் (கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மிகைப்படக் கூறல். பொருளில் மொழிதல், மயங்கக் கூறல் என்னும் ஐந்தும் மற்றொருபொருள் கொள்ளின் அவை வசையற்றன வாதல் போல அவ்வந்நூற்குப் பயன்படவரும் பகுதியான்) ஒத்தல் கொள்ளப்படும்’ என்பர் பேராசிரியர். உக்தியென்பது செயற்கை வகையாகிய நூற் புணர்ப்பாயின் நூல் செய்யுங்கால் இயல்பு வகையாகிய வழக்குஞ் செய்யுளும் போலச் சொல்லுதல் ஒண்மையுடையதன்று எனின், அவ்வாறு செவ்வனம் (இயல்பு வகையாற்) சொல்லுதல் நுண்மை யொடு புணர்ந்த ஒண்மைத்தாதல் வேண்டும் என்பது (ஆசிரியன்) முன்னர்ச் சொல்லினானாம். எனவே அங்ங்ணம் ஒண்மையுடைய தாதலே உத்தி என்பது தானே விளங்கும். செவ்வனஞ் சொல் லாத தந்திரவுத்தி வகையும் அவ்வாறே ஒண்மையுடையவாம் என்பது இச்சூத்திரத்தின் கருத்தாகும். எனவே செவ்வனஞ் செய்தலே உத்தி எனவும் துதவியதறிதல் முதலாக இங்குச் சொல்லப்பட்டவை உத்திவகையெனவும் கொள்வர் பேராசிரியர், முன்னர் (மரபியல்-98) எதிரது நோக்கி முப்பத்திருவகை யுத்தி எனத் தொகை கூறிப் பின்னர் (இச்சூத்திரத்தில்) ' மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்து கொண் டினத்திற் சேர்த்தியுணர்த்தல் வேண்டும்’ என்கின்றாராகலான் அங்ங்ணம் இனம்பற்றி அவற்றோடு அடங்குவனவெல்லகம் அவற்றுவிரியாகும் என்னுங் கருத்தினால் ,உத்தி வகை விரிப்பின் என்றார் ஆசிரியர். "அவனிவ னுவனென வரூஉம் பெயரும்’ (சொல்-164) என்பதனுள், தொகையின்றியுஞ் சுருங்கச் செய்வதோர் ஆறு (உபாயம்) உளதாயினும் அவை பதினைந்து பெயருமே ஒரு நிகரனவென்பது அறியலாகும் வண்ணம் அப்பதினைந்தும்' எனத் தொகை கூறுதல் வெள்ளிதன்றி ஒள்ளிதாகவே யமைதலின் தொகுத்துக் கூறல் உத்திவகையான் அமையும் எனவும், இனி 'மெய்பெறு மரபிற்றொடைவகை தாமே? (செய்-கoக) என்னுஞ் சூத்திரம் போல்வன பிறிதொரு பொருள் பயக்குமென்றலும்