பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝4斡 தொல்காப்பியம் c- SHHSAASAASAASAASAASAASAASAASAASAASAA AAAA SAMAAASAASAASAASAAAS-------پی-سی- مسیه அச்சூத்திரத்துட் காட்டப்பட்டது எனவும் இவ்வாற்றால் இவ் அத்தி வகை எல்லா நூற்கும் இன்றியமையாவாயின எனவும் கூறுவர் பேராசிரியர். ‘இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (சொல்-19) என்றாற் போலச் சொல்லிச் செல்வன செவ்வனஞ் செய்யும் உத்தியாகலின் அவை உத்திவகையெனப்படா உத்தியெனவேபடும் என்பது பேராசிரியர் கருத்தாகும். இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட முப்பத்திரண்டு உத்திவகை இவையெனவும் அவ்வகைக்கு இனமாக விரித்துக் கொள்ளப்படுவன இவையெனவும் பேராசிரி யர் உதாரணங் காட்டி விளக்கியுள்ளார். எண்ணிய முப்பதிரண்டுமல்லன தோற்றினும் அவற்றுள் அடக்கி அவைதாம் ஒருங்குவரினும் வேறு தெரிந்து நூல்சொல்லிய அல்ல பிறவருமாறும் அவை சொல்லிய வகையாற் சுருங்கநாடி இனத்திற் சேர்த்துமாறும் பேராசிரியருரையிற் காட்டப்பட்டன. இவ்வுத்திவகை பற்றி இளம்பூரணரும் பேராசிரியரும் கொண்ட பாடங்கள் உத்திவகையின் பெயர்களிற் சில மாற்றத் தைக் குறிப்பனவாகும். 袭 மொழிந்த பொருளோடொன்ற வைத்தல், மொழியாத தனை முட்டின்றி முடித்தல் என இளம்பூரணர் கொண்ட இரண்டுத்திகளையும் மொழிந்த பொருளொடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்’ என ஒரே உத்தியாகக் கொண்டார் பேராசிரியர். இ. வந்தது கொண்டு வாராதது முடித்தல்' என இளம்பூர ணரும் வாராததுணர்த்தல் எனப் பேராசிரியரும் பாடங் கொண்டனர். 'தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல்” என இளம்பூரணரும் "தன்கோட் கூறல் முறையிழைாமை எனப் பேராசிரியரும் பாடங் கொண்டனர். 'ஒருதலையன்மை முடிந்தது காட்டல்' என்பதனை இளம் பூரணர் ஒரே உத்தியாகக் கொண்டார், பேராசிரியர் ஒருதலை யன்மை’ எனவும் முடிந்ததுகாட்டல்’ எனவும் இரண்டாகக் கொண்டார்,