பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱4念 தொல்காப்பியம் தன்கோட் கூறல் முறைபிறழாமை எனப் பாடங் கொள்வர் பேராசிரியர். 14, 15 இறந்தது காத்தல் எதிரது போற்றல்' என்னும் இரண்டும் யாப்பருங்கலவிருத்தியிலும் நன்னூலிலும் இறந்தது விலக்கல் எதிரது போற்றல்' என ஆளப்பெற்றன, காத்தல் என்றது குற்றமே காக்க (திருக்குறள்-434) என்புழிப்போல விலக்குதல் என்ற பொருளில் ஆளப்பெற்றது. 16. மொழிவாம்' என்றல் என்பது இவ்விருநூல்களிலும் "உரைத்தும் என்றல் எனக் குறிக்கப் பெற்றது. 17. கூறிற்றென்றல்' என்பது, நன்னூலில் உரைத்தாம் என்றல் எனக் குறிக்கப்பெற்றது. 18. தான் குறியிடுதல் என்பது, யாப்பருங்கலவிருத்தி யிலும் நன்னூலிலும் தன் குறி வழக்கம் மிகவெடுத்துரைத்தல்' எனக் காணப்படுகிறது. 19. ஒருதலையன்மை முடிந்தது காட்டல்’ என்பதனை ஒருத்தியாகக் கொண்டு ஒருபொருளையோதியவழிச் சொல்லு தற்கே யுரித்தன்றிப் பிற பொருட்கும் பொதுவாக முடித்தமை காட்டல்' என விளக்கம் தந்தார் இளம்பூரணர். 19,20. ஒரு தலையன்மை என்பது இரண்டு மொழிதல் எனவும் முடிந்தது காட்டல்' என்பது முடிவிடங்கூறல்” எனவும் யாப்பருங்கல. விருத்தியிலும் நன்னூலிலும் கூறப்பட்டுள்ள உத்திகளாகக் கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியதாகும். 21. ஆணை கூறல் என்பது யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூலிலும் காணப்படவில்லை. 22. பல்பொருட்கேற்பின் நல்லது கோடல் இதனை 'ஏற்புழிக்கோடல் எனவும் ஒருபுடைச் சேறல் எனவும் சொல்லுப? என்பர் பேராசிரியர். எடுத்த மொழியின் எய்தவைத்தல் என நன்னுரலில் வரும் உத்தி இங்குக் கருதத்தக்கது. 23. தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்: