பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 243 ' சோல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் ’’ (நன்னூல்) என்பதும் அது என்பர் இளம்பூரணர் 24 மறுதலை சிதைத்துத் தன்றுணிபுரைத்தல்' என்பது யாப்பருங்கலவிருத்தியிலும் நன்னூலிலும் இடம்பெறவில்லை. 25, 26. பிறன் கோட் கூறல் என்பதனையும் அறியாது.டம் படல்’ என்பதனையும் யாப்பருங்கல்விருத்தியும் நன்னூலுரையும் பிறனுான் முடிந்தது தானுடம்படுதல் என்ற சொல்லமைப்பி லேயே அடக்கியிருத்தல் கூடும். 27. பொருளிடையிடுதல் என்பது ஒரு பொருளை யோதிய வழி, அதற்கினமாகிய பொருளைச் சேரக் கூறாது இடையீடுபடக் கூறுதல் என்பர் இளம்பூரணர். நன்னூலிலுள்ள முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்' என்னும் இரண்டு உத்திகளும் இதன்கண் அடங்கும். 28. எதிர்பொருளுணர்த்தல்' என்பது நன்னூலில் வரும் "எதிரது போற்றல்’ என்ற உத்தியிலோ அல்லது முடிவிடங் கூறல்” என்ற உத்தியிலோ அடங்கும். 29. சொல்லினெச்சம் சொல்லியாங்குணர்த்தல் என்பது யாப்பருங்கலவிருத்தியிலும் நன்னுாலிலும் வரும் எஞ்சிய சொல் லின் எய்தக் கூறல் என்னும் உத்தியாதல் கூடும். 30. தந்துபுணர்ந் துரைத்தல் என்பது, நன்னூலில் வரும் 'ஏதுவின் முடித்தல் என்னும் உத்தியாதல் கூடும். 31. ஞாபகங்கூறலாவது, இரண்டுறமொழிந்து இரண்டு சொற்களும் பொருள்கோடல் என்பர் இளம்பூரணர். சூத்திரம் செய்யுங்கால் அரிதும் பெரிதுமாகச் செய்து மற்றும் அதனாலே வேறு பல பொருளுணர்த்தல்' என்பர் பேராசிரியர். 32. உய்த்துக் கொண்டுணர்தல் - இஃது உய்த்துரை வைப்பு என யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூலிலும் இடம் பெற்றுள்ளது.