பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邀48 தொல்காப்பியம் தது விலக்கல் எனவும் எதிரது போற்றலை எதிரது போற்றல் எனவும் மொழிவாமென்றலை உரைத்து மென்றல் எனவும், கூறிற்றென்றலை உரைத்தாமென்றல் எனவும், தான்குறியிடுத லைத் தன்குறிவழக்க மிக வெடுத்துரைத்தல் எனவும் முடிந்தது காட்டலை, முடிவிடங்கூறல் எனவும் பிறன்கோட்கூறலைப் பிறன் கோட் கூறல் எனவும், சொல்லினெச்சம் சொல்லியாங்குணர்த்தல் என்பதனை எஞ்சிய சொல்வின் எய்தக்கூறல் எனவும் கொள்ள @排f了星鹉。 பல்பொருட்கேற்பின் நல்லது கோடலை ஏற்புழிக்கோடல் என்பர் உரையாசிரியர்கள். மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்றி முடித்தல் என்பதனை உரையிற் கோடல் என்பர் இளம்பூரணர். யாப்பருங்கல விருத்தியாசிரியர் இவை பாடலனார் உரை யெனக் குறித்த 32 தந்திர உத்திகளுள் முடித்துக்காட்டல், தானெ டுத்து மொழிதல், சொற்பொருள் விரித்தல், ஏதுவின் முடித்தல் எடுத்த மொழியின் எய்தவைத்தல், இன்னதல்ல திதுவென மொழிதல், ஒன்றின முடித்தல், தன்னின முடித்தல், பாட்டெறிந் தொழுகல், முன்மேற் கோடல், பின்னது நிறுத்தல், எடுத்துக் காட்டல், முடிந்தது முடித்தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், தொடர்ச் சொற் புணர்த்தல், யாப்புறுத்தமைத்தல், விகற்பத்துமுடித்தல், தொகுத்துடன் முடித்தல் எனும் 17 உத்திகள் தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. இவற்றுள் யாப்புறுத் தமைத்தல் தொகுத்துடன் முடித்தல் எனும் இரண்டும் நீங்க லாக ஏனைய பதினைந்தும் நன்னூலில் உள்ளன. தொல்காப்பியனார். பாடலனார் நன்னூலார் கூறிய உத்திவகையுளடங்காத வேறு சில உத்திகளும் பழையவுரைகளில் இடம் பெற்றுள்ளன. யாப்பருங்கலக் காரிகையுரையாசிரியர் தலை தடுமாற்றத் தந்து புணர்ந்துரைத்தல் என்னும் ஒர் உத்தியைத் தம்முரையிற் குறித்துள்ளார். தொல்காப்பிய வுரையாசிரியர்களும் நன்னூலுரையாசிரியர்களும் தத்தம் உரைகளிற் குறிப்பிடும் உத்தி யின் பெயர்களும் அவற்றுக்குரிய விளக்கங்களும் எடுத்துக் காட்டுக் களும் ஒப்புநோக்கி ஆராய்ந்து வரையறுக்கத் தக்கனவாகும். தொல்காப்பியத்தின் இறுதிப்பகுதியாகிய மரபியல் பிற் காலத்திற் பல மாற்றங்களைப் பெற்றுள்ளதென்பது,