பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 受4? 'வடுவில் காப்பிய மதுரவாய்ப் பொருள் மரபு வீட்டியதால் வழுதியாட்சியை வளவன் மாற்றிட மதுரை கூப்பிடுநாள்' எனவரும் ஒட்டக்கூத்தர் வாய்மொழியால் உய்த்துணரப்படும். இம்மரபியலிற் கூறப்பட்டுள்ள முப்பத்திரண்டுத்திகளும் கெள டலிய அர்த்தசாத்திரத்திலுள்ள முப்பத்திரண்டு உத்திகளோடு ஒத்துக் காணப்படுகின்றன என்பர் மகாவித்துவான் ரா. இராக வையங்கார் அவர்கள். (தமிழ் வரலாறு - பக்கம் 318). தொல் காப்பிய மரபியலிற் காணப்படும் முப்பத்திரண்டுத்திகளுக்கும் கெளடவீயத்திலுள்ள முப்பத்திரண்டுத்திகளுக்கும் சொல்வகை யாலும் கருத்து வகையாலும் வேறுபாடுகள் உள்ளன. இறந்தது காத்தல், எதிரது போற்றல், மொழிவாமென்றல், அறியாதுடன் படல் எனத் தொல்காப்பியத்திலுள்ள உத்திகளுக்கு ஒத்த வட மொழிப் பெயர்களைத் தேடிக்காண முடியவில்லை. முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றம் என்றதனை 'அபவர்க்கம்’ என்றும், கூறிற்றென்றலைப் பிரதேசம்’ என்றும், பல்பொருட் கேற்பின் நல்லது கோடலை விகற்பம்’ என்றும், பிறன் கோட் கூறலைப் பூருவபக்கம் என்றும், எதிர்பொருணர்த்தலை 'வியர் யயம் என்றும், ஞாபகங் கூறலை அபதேசம்’ என்றும், அவர்கள் குறிப்பிட்டிருப்பது அவ்வுத்திகளின் பொருளியைபுக்கு முற்றிலும் மாறுபடுகிறது. எனவே இவ்வுத்திகளிற் பெரும்பாலான ஒத்திருப் பனவாக மகாவித்துவான் இராகவையங்காரவர்கள் கூறியிருப்பது அத்துணைப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. தொல் காப்பிய மரபியவிலும் கெளடலிய அர்த்தசாத்திரத்திலும் இடம் பெற்றுள்ள உத்திகள் முப்பத்திரண்டுத்தி என்னும் தொகை யளவில் ஒத்தனவாயினும் அவற்றின் இலக்கண அமைப்பில் வேறு பட்டனவாகவேயுள்ளன. இவ்வேறுபாட்டினையுளங் கொண்ட மகாவித்துவான் ஐயங்காரவர்கள் இவ்வுத்திகள் வடமொழி நூலைப் பின்பற்றியே அமைந்திருத்தல் வேண்டும் என்றும் தமது கொள்கையை வற்புறுத்தும் கருத்தினாய் இவ்வுத்திவகையில் தொல்காப்பியர்க்கும் கெளடலியர்க்கும் ஒத்தமுதனுால் இஃதென்று இன்னுந் துணிதற்கில்லையென்றும் ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்’ எனப்பாயிரங் கூறுதலால் அவ்வைந்திரத்தேனும் அதன் வழித்தாகிய பிறிதொரு நூலிலேனும் இவ்வுத்திகள் உள்ளன வென்று நினைக்கப்படும் என்றும் ஐயுறுகின்றார். உத்தி என்னும் சொல் வட சொல்லாயினும் தொல்காப்பிய மரபியலில்