2镇8 தொல்காப்பியல் உத்தியென்னுஞ் சொல்லாற் குறிக்கப்படும் நூற்புணர்ப்பாகிய முறைமை தமிழிலக்கண நூல்களுக்குரிய சிறப்புடையதாதலின் இதற்கு முதனூலாக வடநூல் ஒன்று இருத்தல் வேண்டும் என ஊகிப்பதும் அவ்வூகத்தினையடிப்படையாகக்கொண்டு தொல் காப்பியர் காலத்தை உறுதிப்படுத்த எண்ணுவதும் பொருத்த முடையன அல்ல. அர்த்த சாத்திரம் இயற்றிய கெளடலியர் தமிழ் நாட்டிற் காஞ்சிதகரத்து வாழ்ந்தவராதலின், அவர் காலத் துக்கு முற்பட்ட தொல்காப்பிய மரபியலிலுள்ள உத்திகள் முப் பத்திரண்டினை யுளங்கொண்டு தாமியற்றும் பொருள் நூல மைப்புக்கு ஏற்ற வகையில் தாம் செய்த அர்த்தசாத்திரத்திலும் முப்பத்திரண்டு உத்திகளை வகுத்துக் கூறியுள்ளார் எனக் கொள்வதே தொல்காப்பியர் கெளடலீயர் ஆகிய இவ்விருவர் வரலாற்றுக்கும் கால அமைதிக்கும் ஏற்புடையதாகும் எனத் தெளிதல் எளிதாகும். தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் உரைவளம் முற்றிற்று. مسعثلآخثخد
பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/252
Appearance