பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2窓 தொல்காப்பியம் ஆய்வுரை : (இ-ள்) மரக்கிளையினையே வாழும் இடமாகக் கொண்ட 'குரங்கினையும் குட்டி யென்ற இளமைப்பெயராற் கூறுவர் ஆசிரியர் எறு. கோடு வாழ்குரங்கு எனவே அதன் இனமாகிய ஊகமும் முகவும் குட்டியென்னும் இளமைப் பெயராலும் வழங்கப்பெறும் என்றார் இளம்பூரணர். குட்டியும் கூறுப என்புழி உம்மை, இங்குக் கூறப்பட்ட குட்டியென்னும் இளமைப் பெயரேயன்றி அடுத்த நூற்பாவிற் கூறப்படும் மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்னும் இளமைப் பெயர்களையும் தழுவி நின்றமையின் எதிரது தழிஇய எச்ச வும்மை என்றார் இளம்பூரணர், கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப' எனப்பாடங் கொண்ட பேராசிரியர், குரங்கும் என்புழி உம்மையை இறந்தது தழிஇய எச்சவும்மையாக்கி யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் என மேற்குத்திரத்திற் கூறப்பட்ட ஐவகை உயிரினத்திற்கும் குட்டி’ என்னும் இவ்விளமைப்பெயர் வழக்கம் உண்டென்பதனைத் தழுவி எடுத்துக்காட்டுத் தந்துள்ளைைம நினைத்தற்குரியதாகும். (க.க) க்ச. மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். இதுவுங் குரங்குக் குரியதோர். இயல்பு உணர்த்துதல் துதலிற்று. (இ-ஸ்) மகவு முதலாகிய நான்குங் குரங்குச்சாதி இளமைப் பெயராம் என்றவாறு.

  • குரங்குக்குட்டி, குரங்குமகவு, குரங்குப்பிள்ளை, குரங்குப் பறழ், குரங்குப்பார்ப்பு. Surira°thuash. :

- (இ - ள்) மேலைச் சூத்திரத்தெடுத்தோதிய குரங்கிற்குக் குட்டியென்னும் பெயரேயன்றி மகவும் பிள்ளையும் . பறழும்