பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 2? அஃது, ஒட்டகக்கன்று எனவரும். ஒருவழி யென்ற னானே, எவற்றினும் இது சிறுபான்மை யெனவுணர்க. ஆய்வுரை : (இ - ள்) (யானை, குதிரை, கழுதை, கடமை, எருமை கவரி, கராகம் என மேற்குறித்த) அவற்றுள்ளே ஒட்டகமும் சிறுபான்மை கன்று என்னும் இளமைப் பெயரால் வழங்குவதில் ஒத்த தன் மையதாகும் எ-று. (க.வு) க.க. குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை2 இளம் பூரணம் : (இ - ள்) என்றது, குழவியென்னும் இளமைப் பெயர் யானை பெறும் என்றவாறு. Ġa ng mraỆrfluainio : (இ-ள்) ஒழிந்துநின்ற குழவிப்பெயர் குஞ்சரத்திற்கு உரியது (எ - று) அது, 'ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி' (அகம்: 165) எனவரும். நிகரவற்றுள்ளென மேற் குஞ்சரத்தோடொக்கு மெனப்பட்ட கராத்தின் குழவியுங் கவரிக் குழவியும் வந்த வழிக் கண்டுகொள்க.3 ஆய்வுரை : (இ - ள்) யானை என்பது குழவி என்னும் இளமைப் பெயர் கொடுத்து வழங்குதலைப் பெறும் எ - று - 1. ஒரு வழி - சிறுபான்மை. 2. குஞ்சரம் - யானை, குஞ்சரம் குழவிப்பெயர்க் கொடை பெறும் என இயையும். 3. மரபியல் கள - ஆம் சூத்திரத்துள் கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே' என்றமையால் பின்னர்க் குஞ்சரத்திற்கு (யானைக்கு) உரியதாகக் கூறப்படும் குழவி' என்னும் இளமைப் பெயரும் கராக்குழவி, கவரிக்குழவி என வழங் குதல் இவ்விரண்ட ற்கும் எனக் கொண்டார் பேராசிரியர்.