பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3翰 - தொல்காப்பியம் பேராசிரியம் : (இ-ள்) இம்மூன்றுங் குழவியென்னும் பெயர்க்கு உரிய(எ-று). 'நிரம்ப நாடின்' என்பது, மூன்றுபெயரும் ஒருபிறப்பின் பகுதியாகலின் அம்மூன்றற்கும் ஒப்பவருமென்றவாறு. இக்கருத்தானே கோடுவாழ் குரங்கு” (தொல்-மர: 13) என்றவழி இம்மூன்றுங் கொண்டாமென்பது. இவற்றுக்கு உதாரணங் காணாமையிற் காட்டாமாயினாம். இலக்கணம் உண் மையின் அமையுமென்பது.1 ஆய்வுரை : . (இ.ஸ்) குரங்கு, முசு, ஊகம் என்னும் மூன்றும் முழுதும் ஆராயின் குழவி என்னும் இளமைப்பெயருக்கு உரியன. எ-று. இங்குக் குறித்த மூவகையினமும் குரங்குகளில் ஒத்தபிறப்பின என்பது அவற்றை ஆராயின் இனிது விளங்கும் என்பார் நிரம்ப நாடின்’ என்றார். (e..) உக. குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே இளம்பூரணம் : (இ-ஸ்) என்றது, குழவி மகவென்று சொல்லப்பட்ட இரண்டு2 இளமைப்பெயரு மல்லாத ஏனையவை மக்கட்குரிய வல்ல என்றவாறு. பேராசிரியம் : (இ-ன்) குழவியும் மகவுமென்னும் இரண்டுமல்லது மக்கட் கணின்ற இளைமை தமக்கு வேறுபெயருடையவல்ல (எ-று). ஆணிளைமையும் பெண்ணிளைமையுமென இரண்டாக லின் அல்லவை'யெனப் பன்மை கூறினான். - காவல், குழவி கொள்பவரி னோம்புமதி' (புறம் : 5) எனவும்,

  1. ଜ مي دي - o 哆 * § * t 1. இலக்கணம் கூறப்புட்டிருத்தலால் அதற்குரிய இலக்கியமும் இருத்தல் வேண்டும் என்க்கொள்ளப்ப்டும். . 2. சொல்லப்பட்டவிரண்டின் உ.வே.