பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் $勤 மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி' (பர் துப்-பெரும்பாண் , 89) எனவும் வரும். 'கிழவ வல்ல' என்ற மிகையானே ஆண்பிள்ளை பெண் பிள்ளையெனப் பிள்ளைப்பெயரும் மக்கட்பாற்படுவனகொள்க. ஆய்வுரை: (இளமை பற்றிய மரபுப் பெயர்களாக மேற்குறித்த)பார்ப்பு முதலிய ஒன்பது பெயர்களுள் குழவி, மகவு என்னும் இருபெயர் களையன்றி ஏனையபெயர்கள் மக்களுக்கு உரியனவாக வழங்கப் பெறா எ-று. மக்கட்கண்ணே கிழவ அல்ல-மக்களிடத்தே உரியனவாக வழங்குவன அல்ல. இளமைப் பெயர்களாகிய இவை ஆணிளமைக்கும் பெண் னிளமைக்கும் ஒப்பவுரியன. 'கிழவ அல்ல' என்ற மிகையால் ஆண் பிள்ளை, பெண்பிள்ளை எனப் பிள்ளைப் பெயரும் மக்கட்பாற் படுவன கொள்க’ என்பர் பேராசிரியர். - 'மடியகத் திட்டாள் மகவை' (சிலப் : 9.22) எனவரும் சிலப்பதிகாரத்தொடருரையில் குழவியு மகவும் ஆயிரண்டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே எனவரும் இச்சூத்திரத்தை மேற் கோளாகக் காட்டுவர் அடியார்க்கு நல்லார். (ല് உச. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் 2கொள்ளவும் அமையும் ஒரறி வுயிர்க்கே. இளம்பூரணம் : - (இ-ள்) என்றது ஒரறிவுயிராகிய3 புல்லும் மரனும் இளமைப்பெயர் பிள்ளை முதலாகக் சொல்லப்பட்ட நான்குங் கொள்ளவும் அமையும் என்றவாறு. 1. கிழவ அல்ல-உரிமையுடையன அல்ல. கிழமை-உரிமை. 2. கொள்ளவும் அமையும் ஒரறிவுயிர்க்கே எண்புழிக் கொள் ளவும் என்ற உம்மையை இவ்வாறே எச்சப்படுத்தி, ஒரறிவு யிரல்லாத பிறவும் பிள்ளை குழவி கன்று முதலிய இளமைப் பெயர் பெற்று வருதலைக் கொள்வர் நச்சினார்க்கினியர். (சீவகசிந்தாமணி 1257, 2390 - ஆம்பாடல்களின் உரையினை யும் தொல் - சொல் சூ - 57 - நச். உரையினையும் நோக்குக.) 3. புல்லுமரனுமாகிய,