பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器空 தொல்காப்பியம் உம்மை எதிர்மறையாகலான் கன்றென்றதே பெரும்பான்மை. பேராசிரியம் : - (இ-ன்) பிள்ளை, குழவி, கன்று, போத்தென்னும் நான்கும் ஓரறிவுயிரின் இளைமைப் பெயர் (எ-று). ஓரறிவுயிரென்பன முன்னர்ச் (583) சொல்லப்படும் ஒரறி அயிரென்பது, பண்புத்தொகை. 'கமுகம்பிள்ளை, தெங்கம்பிள்ளை’ எனவும், 'வீழி றாழைக் குழவித் தீநீர் '(பத்துப்-பெரும்பாண்:357) எனவும், 'பூங்கன்று: எனவும், கோத்துக்கால்’ எனவும் வரும். வீழிறாழை யெனப்பட்டது. தெங்கு போத்துக்காலென்பது கரும்பு. ஒரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் உம்மை யை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும்; அவை, 'குழவிவேனில்’ (கலி:36) எனவும், 'குழவித்திங்கள்’ (கலி 103. சிலப்-2:38) எனவும், 'குழவிஞாயிறு: (பெருங்-133; 29) எனவும்,

பகுவாய் வராஅற் பல்வரி விரும்போத்து’ (அகம்:36) எனவும்,

"புலிப்போத் தன்ன புல்லன ற்காளை (பெரும்பாண்:138) எனவும் இவையும் இளைமைக்குறிப்பினவாகலிற் காணப்பட்டன. மற்று, ஒரறிவுயிர் ஈண்டுக் கூ றியதென்னையெனின்.குழவிப் பெயர் அதிகாரப்பட்டமையானென்பது. மற்றுப் புல்லும்