பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் . 39 (இ.ஸ்) ஒரறிவுயிராவது உடம்பிாைனறிவது ஈரறிவுயி ராவது உடம்பினானும் வாயினானும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் அறிவது; நாலறிவுயி ராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினா னும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் அறிவது, ஆறறிவு யிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினா னும் செவியினானும் மனத்தினானும் அறிவது, இவ்வகையினான் உயிர் ஆறுவகையினான் ஆயின. இவ்வாறு அறிதலாவது: உடம்பினால் வெப்பம் தட்பம், வன்மைமென்மை அறியும். நாவினாற் கைப்பு,காழ்ப்பு, துவர்ப்பு உவர்ப்பு, புளிப்பு, மதுரம் என்பன அறியும் மூக்கினால் நன்னாற் றம், தீய நாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை,குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும். செவியினால் ஒசை வேறுபாடும், சொற்படும் பொருளும் அறியும். மனத்தினா லறியப்படுவது இது போல்வன வேண்டுமெனவும், இது செயல் வேண்டுமெனவும், இஃது எத்தன்மையெனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்ட வழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வகையினான் உலகிலுள்ளவெல்லாம் மக்கட்கு அறித லாயின. இனி அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங் களாற் கூறுதும். பேராசிரியம் : இது, மேல் அதிகாரப்பட்ட ஒரறிவுயிர் உணர்த்தும்வழி அவ்வினத்தனவெல்லாங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஒன்றறிவதென்பது ஒன்றனையறிவது, அஃ தாவது உற்றறிவதென்பதும்; இரண்டறிவதென்பது அம்மெய் யுணர்வினோடு நாவுணர்வுடையதெனவும், மூன்றறிவுடையது அவற்றோடு நாற்றவுணர்வுடையதெனவும், நான்கறிவுடையது அவற்றோடு கண்ணுணர்வுடையதெனவும், ஐந்தறிவுடையது அவற்றோடு செவியுணர்வுடையதெனவும், ஆறறிவுடையது அவற்றோடு மனவுணர்வுடையதெனவும், அம்முறையானே நுண் ணுணர்வுடையோர் நெறிப்படுத்தினர் (எ-று). 1. கார்ப்பு எனத் திருத்திக் கொள்க.