பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? தொல்காப்பியம் மூக்கினாலும் அறியப்படும் அம்மூன்றுடன் கண்ணினாற் கண்டறி தலும் ஆகிய நான்கறிவினையுடையது; ஐயறிவுயிராவது உடம்பி னால் உற்றறிதல் நாவினாற் சுவைத்தறிதல் மூக்கினால் முகர்ந் தறிதல், கண்ணினாற் கண்டறிதல் ஆகியவற்றுடன் செவியினாற் கேட்டறிதலும் ஆகிய ஐந்தறிவினையுடையது; ஆறறிவுயிராவது மேற்குறித்த ஐம்பொறிகளால் அறியும் ஐம்புலவுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினையும் ஒருசேர வுடையது என நுண்ணுணர்வினால் அவற்றின் உணர்வினைக் கண்டுணர்ந்தோர் உயிர்களையெல்லாம் ஆறுவகையினவாக முறைப்படுத் துணர்த்தினர் எறு. இவ்வாறு உலகில் வாழும் எல்லாவுயிர்களையும் அவற்றின் உடம்பில் அமைந்துள்ள அறிகருவிகளாகிய ஐம்பொறிகளையும் உய்த்துனரும் உட்கருவியாகிய மனத்தினையும் வாயிலாகக் கொண்டு அவ்வுயிர்கள் முறையே ஒரறிவு முதல்ஆறறிவீறாகப் படிப்படியே அறிவினாற் சிறந்து விளங்குந் திறத்தினைத் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே வாழ்ந்த நுண்ணுணர் வுடைய தமிழ்ச்சான்றோர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தி யுள்ளனர் என்பார். நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்றார் ஆசிரியர். உயிர்கள் தாம் பெற்றுள்ள மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக வும் அகக்கருவியாகிய மனத்தின் வாயிலாகவும் முறையே ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி என்னும் ஜம்புலவுணர்வுகளையும் உய்த்துணர்வினையும் பெற்று ஒரறிவுயிர்முதல் ஆறறிவுயிரீறாக அறிவினால் வளர்ச்சி பெற்றுள்ள திறத்தை நுனித்துணர்ந்து அவற்றை அறுவகையுயிர்களாகப் பகுத்துரைக்கும் இவ்வுயிர்ப் பாகுபாடு பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். இஃது ஒருசிலர் கூறுவது போன்று ஒரு சமயக்கோட் பாட்டிற்பட்டதன்று. மனவுணர்வினராகிய மக்களையும் தேவர் முதலியோரையும் விலங்கு, பறவை முதலியவற்றையும் ஐயறி வுயிர்களுள் அடக்குதல் சமணசமயக் கோட்பாடாகும். இதனை யுளங்கொண்டே

  • வானவர் மக்கள் நரகர் விலங்குபுள்

ஆதி செவியறிவோ டையறிவுயிரே (நன்னுல் - உரியியல்-8) என்றார் பவணந்திமுனிவர். ஐவகைப்பட்ட பொறியுணர்வுகட்கும் அடிப்படையாய் விளங்குவது மனவுணர்வாகும். மனமாகிய அகக்கருவியினை வாயி