பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಘ್ನ! துெ.ால்காப்பியப் பொருளதிகாரம் ఖడ్గ இரவியல் - உரைஅைளன். பதிப்புரை மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பதிப்புத் துறை, தொல்காப்பியப் பொருளதிகாரத்தின்கண் அமைந்துள்ள அகத் திணையியல் தொடங்கிச் செய்யுளியல் வரையிலான எட்டு இயல் களுக்கும் பல்வேறு உரைகளையும் தொகுத்து உரைவளப் பதிப்பு களைத் தனித்தனியே இயல்வரிசையாக இதுவரையில் வெளியிட் டுள்ளது. இவ்வரிசையில் பொருளதிகாரத்தின் இறுதியியலான மரபியல்-உரைவளம் இப்போது வெளிவருகிறது. இத்துடன் பொருளதிகார உரைவளப் பதிப்புப்பணி நிறைவு பெறுகிறது. மரபியலுக்கு இளம்பூரணரும் பேராசிரியரும் எழுதியுள்ள உரைகள் இரண்டும் இப்பதிப்பில் சூத்திரந்தோறும் முறையே அமைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் கண் இன்றியமையாத உரை விளக்கங்கள் அடிக்குறிப்பாகத் தரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு நூற் பாவின் உரைப்பகுதியின் இறுதியிலும் பேராசிரியர் க.வெள்ளை வாரணன் அவர்களின் சிறந்த ஆய்வுரை இணைக்கப்பட்டுள்ளது. இம்மரபியல் உரைவளப் பதிப்பிற்கு அச்சுப்படி பார்த்து உதவிய டாக்டர் துர. சேதுபாண்டியன் அவர்களுக்கும், அழகுற அச்சிட்டுத் தந்த கோனார் பிரிண்டர்ஸ் நிறுவனத்தார்க்கும் மிக்க நன்றி. 25–5 - 94 டாக்டர் அ. விநாயகமூர்த்தி பதிப்பு அலுவலர்,