பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தொல்காப்பியம் பிற ஆவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன. புல்லென்பது புறவயிர்ப்பு உடையன; மரமென்பது அக வயிர்ப்புடையன. அவையாமாறு முன்னர்க் கூறப்படும். பேராசிரியம் : இது முறையானே ஓரறிவுடையன வுணர்த்துதல் நுத விற்று. - (இ-ஸ்) : புறக்காழனவாகிய புல்லும் அகக்காழனவாகிய மரனும் ஒரறிவுடைய, பிறவும் அக்கிளைப் பிறப்பு உள்ளன (எ-று). 'கிளைப்பிறப்'பென்பது கிளையும் பிறப்புமென்றவாறு,2 கிளையென்பன: புறக்காழும் அகக்காழுமின்றிப் புதலுங் கொடி யும் போல்வன, பிறப்பென்பன, மக்களானும் விலங்கானும் ஈன்ற குழவி ஒரறிவின் ஆகிய பருவமும், எஞ்ஞான்றும் ஒரறிவினவே யாகிய என்பில் புழுவுமென இவை. இவை வேறு பிறப்பெனக் கொள்க. மற்று இவற்றுக்கு அறிவில்லை பிறவேனின், பயிலத் தொடுங் காற் புலருமாகலின் ஒரறிவுடையவென வழக்கு நோக்கிக் கூறி னான், இது வழக்குநூலாதலின், அஃதேல், இவை உணர்ச்சி யாயின் இன்பதுன்பங் கொள்ளுமோவெனின் அதற்கு மனமின்மை யின் அது கடாவன்றென்பது. ஆய்வுரை : ஒரறிவுயிரா மாறு கூறுகின்றது. 1. இவை புறத்தே வயிர டைய புல் என்ற பகுப்பிலும் அகத்தே வயிரமுடைய மரம் என்ற பகுப்பிலும் அடங்காமையால் பிற எனப்பட்டன. 2. கிளைப்பிறப்பு என்பதனைக் கிளையும் பிறப்பும் என விரித்து உம்மைத் தொகையாகக் கொண்டார் பேராசிரியர். இளை என்பன புல்போன்று புறவயிரமும் மரம்போன்று உள் வயிர மும் இன்றிப் புதலும் கொடியும் போன்றுள்ள தாவரங்கள். பிறப்பு என்பன தாவரத்தின் வேறுபட்ட பிறப்பினலாய் மக்களிலும் விலங்குகளிலும் ஈன்ற குழவி ஒரறிவினவாய் விளங்கும் பருவமும்,எக்காலத்திலும் ஒரறிவினவாகியே விளங் கும் என்பில்லாத புழுவும் ஆகிய இவை என்பர் பேராசிரியர்.