பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 4? ஆய்வுரை : ஈரறிவுயிர் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நத்தையும் முரளும் ஊற்றுணர்வும், நாவுணர்வும் என இரண்டறிவுடையன. பிறவும் அக்கிளைப் பிறப்பு உள்ளன எ-று. நந்து-நத்தை, முரள்--இப்பிவகை. இவை பிறிதொன்று தாக்கியவழி உற்றறியும் பரிசவுணர்வும், இரையின் சுவை கொள்ளுதலால் நாவுணர்வும் ஆகிய இரண்டறிவுடையன. இவற்றுக் கிளை (உறவு) ஆவன கிளிஞ்சிலும் முற்றிலும் முதலாகிய கடல்வாழ் சாதியும் பிறவும் என்பர் பேராசிரியர். முரள் நந்தாதி நாவறிவோடீரறிவுயிர் (நன்னூல்-சூ-446) என்றார் பவனந்தி முனிவர். (உக) நo. சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் மூவறிவுயிராமாறு உணர்த் துதல் துதலிற்று. (இ-ஸ்) சிதலும், எறும்பும் மூவறிவின; அக்கிளைப் பிறப்பு பிறவுமுள என்றவாறு1 . பிற ஆவன அட்டை முதலாயின. பேராசிரியகம் : இது, மூவறிவின கூறுகின்றது. (இ-ள்) சிதலும் எறும்பும் ஊற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குணர்வுமுட்ைய; அவற்றுக் கிளையும் பிறப்பும் அவ்வாறே மூவறிவுடைய (எ-று). இவை உற்றுணர்ந்து மீடலும் நாச்சுவை கோடலும் நெய்யுள் வழி மோந்தறிதலுமென மூன்றறிவினை யுடையவாறு 1. சிதல்-கரையான். அட்டை என்பது நிலத்திலும் நீரிலும் வாழும் மூவறிவுயிர்.