பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

救奪} தொல்காப்பியம் இவை ஈண்டு வந்து கரிபோதல் இல; கேள்வியில்லன. வருதலென்னை? என்பது கடா:அதற்கு விடை: ஆசிரியர், நண்டுந் தும்பியும் என்று தும்பியைப் பின்வைத்தது, மேல் வருஞ்சூத்திரத் தின் மாவும் மாக்களும் ஐயறிவென்ப’ (தொல்மரபியல் 52) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க; இதனை வாராத தனால் வந்தது முடித்தல் என்னும் தந்திரவுத்தியாற் கொள்க என்று ஆண்டு உரை கூறிப் போந்தாம்; அதுவே ஆசிரியர் கருத் தென்பது சான்றோர் உணர்ந்தன்றே, பூத்த பொங்கர்த் துணை யொடு வதிந்த, தாதுண் பறவை பேதுறலஞ்சி, மணிநா யாத்த மாண்வினைத் தேரன் (அகநா. ச . 10-12) என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்றுணர்க. இக்கருத்தான் இவரும் (திருத்தக்க தேவரும் வண்டு, தும்பி முதலியவற்றுக்குச்) செவியுணர்வுண் டென்று கூறினார்’ எனச் சீவகசிந்தாமணி 892-3 ஆம் செய்யுட் களில் இம்மரபியற் சூத்திரப் பொருளை விளக்கியுள்ளமை இங்கு மனங்கொளத் தகுவதாகும். பெரும்பாணாற்றுப்படையுரை யில் நச்சினார்கினியர் கூறிய விளக்கம் இம்மரபியற் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரையினைத் தெளிவுபடுத்தல் &#f7 655ra]rrub, {币凸) 1 . மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே, இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். ஐயறிவுயிராமாறு உணர்த்து தல் நுதலிற்று. - (இ-ள்) நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய, அக் கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும், நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும்.2 1 மாவுமாக்களும் ஐயறிவினவே” என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 2. நிலத்தில் ஊர்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீர் வாழ் வனவற்றுள் மீன், முதலை, ஆமை முதலாயினவும் ஐம்பொறி யுணர்வுடையனவாதலின் அவையும் அடங்கப் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' என்றார் ஆசிரியர்.