பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

総説 தொல்காப்பியா பேராசிரியர் கொண்ட பாடம். மா-விலங்கு. புள்-பறவை. மேலைச் சூத்திரத்துத் தும்பி என்றது சிறு பறவையினை. மேலைச் சூத்திரத்திற்குறித்த தும்பி முதலாயின நாலறிவின எனக் கூறப் படினும் பறவையினத்துள் ஐயறிவுடைய பெரும்பறவைகளும் இருத்தலால் மாவும் புள்ளும் ஐயறிவின எனப் பாடங் கொண் டார் இளம்பூரணர். ஆறாவதறிவாகிய மனவுணர்வு படைத்த மக்கள்யாக்கையிற் பிறந்தும் தமக்கெனத் தனி நின்றுணரும் உணர்வின்றி வெறும் ஐம்புல அறிவினராய் வாழ்வோரும் உளராதலின் மாவும் மாக்களும் ஐயறிவினவே” எனப் பாடங் கொண்டார் பேராசிரியர். இங்கு மாக்கள் எனப்பட்டார் நன்றுந் தீதும் பகுத்துணரும் மனவுணர்வு வாய்க்கப் பெறாது மக்கள் வடிவிற் காணப்படுவோரை. செவியிற் சுவையுணரா வாயு ணர்வின் மாக்கள் (120) எனவரும் திருக்குறளும் இக்கருத்தை வலியுறுத்தும் இக்கருத்துப்பற்றியே.

  • தக்க இன்ன தகாதன இன்னவென்று

ஒக்க உன்னலராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே’’ (கம்ப-கிட்கிந்தை-வாலிவதை-120) என்றார் கம்பரும். (fäa-) கE. மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே, இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். ஆறறிவுயிராமாறு உணர்த் துதல் நுதலிற்று. - (இபள்) மக்கள் ஆறறிவுயிரெனப்படுவர்; அக்கிளைப் பிறப்பு பிறவுமுள என்றவாறு. பிறவாவன தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்.1 பிறப்புக்கள், 1. உயர் திணை என்மனார் மக்கட்சுட்டே தொல் - கிளவி-1) என்ற தொல்காப்பியனார் தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் ...... உயர்தினை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்) தொல்-கிளவி:ச என்றாராகலின், பிறவாவது தேவர்.அசுரர். இயக்கர் முதலாயினோர்’ என விளக்கந் தந்தார் இளம். பூரணர். இவ்வுரை விளக்கத்தை அடியொற்றியதே. மக்கள் தேவர் நரகர் உயர் திணை எனவரும் நன்னூற் சூத்திரமாகும்