பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 53 இஃது ஆறறிவுயிர் கூறுகின்றது. (இ-ன்) மக்களெனப்படுவோர் ஐம்பொறியுணர்வேயன்றி மனமென்பதோர் அறிவும் உடையர், அக்கிளைப் பிறப்பு வேறும் உள (எ-று). முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவோடு புணர்ந்த ஆடுஉ மகடூஉ மக்களெனப்படும். அவ்வாறு உணர் விலுங் குறைவுபட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுட் சேர்த்திக்கொள்ள வைத் தானென்பது. அவை, ஊமுஞ் செவிடும் குருடும் போல்வன. கிளையெனப்படுவார் தேவருந் தானவரும் முதலாயினார், பிறப் பென்றதனாற், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடை யன வெனப்படும் மனவுணர்வுடையன உளவாயின், அவையும் ஈண்டு ஆறறிவுயிரா படங்குமென்பது. தாமே" யெனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையாரென்றற்குச் சிறந்தாரென்பதுங் கொள்க. ஆய்வுரை : இஃது ஆறறிவுயிராமாறு உணர்த்துகின்றது. (இ-ன்) மக்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுவோர் ஐம் பொறியுணர்வுகளுடன் மனத்தான் உய்த்துணரும் உணர்வாகிய ஆறாவது அறிவும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவர்கள். அக்கிளைப் பிறப்பு வேறும் உள எறு. பிறவாவது, தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்' என இளம்பூரணரும், கிளையெனப்படுவோர் தேவரும் தான வரு முதலாயினோர். பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன வெனப்படும் மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிரா யடங்கும்' எனப் 1. அவ் ஆறு உணர்விலும் குறைவு பட்டாரைக் குறைந்த வகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப் பினுள் சேர்த்துக் கொள்ள வைத்தான் என இத்தொடரைப் பிரித்துப் பொருள் கொள்க.