பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 55 பேராசிரியம் : இச்சூத்திரம் பேராசிரியர் உரையில் இல்லை. ஆய்வுரை : இதுவும் அது. (இ-ன்) விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராம் எ-று. அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. இச்சூத்திரம் பேராசியர் உரையில் இல்லாமை இங்குக் குறிப்பிடத் தகுவதாகும். மேல் நிறுத்தமுறையானே இளமை பற்றிய மரபுப்பெயர்களில் இன்னின்ன இன்னின்னவற்றிற் குரியன எனக் கூறிவந்த நிலையில் ஒரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடு இடையே தோன்றினமையால், ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாகவுள்ள உயிர்ப்பாகுபாட்டினை இடையில் விரித்துக் கூறவேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது. இனி நிறுத்த முறையானே அடுத்த சூத்திர முதலாக இவ்வியல் டுக-ஆம் சூத்திரம்முடிய ஆண்மை பற்றிய மரபுப்பெயர் இன்னின்னவற்றுக் குரியன என்பது வகுத்துணர்த்தப்படுகின்றது. (邸守) நடு. வேழக் குளித்தே விதத்துகளி றென்றல்.’ இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் நிறுத்த முறையானே ஆண் பாற் பெயர்கூறுதல் நுதலிற்று, இச்சூத்திர முதலாயின. (இ-ள்) களிறென்று விதந்துகூறுதல் யானைக்குரித்து என்றவாறு. கசு, கேழற் கண்ணுங் கடிவரை இன்றே. இளம்பூரணம் : (இ-ள்) பன்றியின்கண்ணும் ஆண்பாலைக் களிறென்றல் கடியப்படா தென்றவாறு. வேழம் - யானை களிறு என்பது ஆண்மைப்பெயர். கேழல்-பன்றி

  • இவ்விரு சூத்திரங்களையும் ஒன்றாகக் கொண்டார் பேராசிரியர்.