பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

部総 தொல்காப்பியம் பேராசிரியம் : இவை, உரையியைபுநோக்கி உடனெழுதப்பட்டன. (இ-ள்) இவை ஒன்பது பெயரும் ஒருத்தலென்னும் பெயருக்கு ஒன்றும் (எ-ற) இவற்றைப் பெரும்பான்மை சிறுபான்மைபற்றி மூன்று சூத்திரத்தான் ஒதினானென்பது. உதாரணம். 'காடுமீக் கூறுங் கோடேத் தொருத்தல்' (அகம் : 65) என யானை ஒருத்தலென்றாயிற்று. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. ஆய்வுரை : (இ-ன்) புல்வாய், புலி, உழை, மரை, கவரி என்பனவும் முற்குறித்த கராம் என்பதனோடு அறுவகை உயிர்களுக்கும் ஒருத்தல்' என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயர் உரியதாகும் 37-g}. (நஎ) (இ-ஸ்) நீண்ட தந்தத்தினையுடைய யானையும் பன்றி யும் ஒருத்தல் என்னும் ஆண்மை பற்றிய மரபுப்பெயரால் வழங்கப் பெறும் அத்தன்மையின எ-று. ஆண்யானைக்கும் பெண்யானைக்கும் உரிய வேறுபாடு விளங்க வார்கோட்டியானை' என ஆண்யானைக்கு அடைமொழி புணர்த்துக் கூறினார். இவ் அடைமொழி பன்றியுள் ஆணிற்கும் உரியதாகும். (க.வு) (இ-ஸ்) எருமையினத்தும் ஆண் எருமையை ஒருத்தல் என வழங்குதல் பொருந்தும் எறு. புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்னும் இவ் ஒன்பது இனத்துள்ளும் ஆணினை ஒருத்தல் என்னும் பெயரால் வழங்குதல் பொருந்தும் என்ப தாம். 1. புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை இவை ஒன்பதும் ஒருத்தல்' என்னும் ஆண்பாற் பெயர் பெறுவன. இவற்றை ஒருங்குகூறாது மூன்று சூத்திரத் தாற் கூறியது பெரும்பான்மை சிறுபான்மைபற்றி என்பர் பேராசிரியர்.