பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 器9 இம்மூன்று சூத்திரங்களையும் இயைபுநோக்கி ஒருங்கே உரை உதாரணங் காட்டினார் பேராசிரியர். (க.க) ச0. பன்றி புல்வாய் உழையே கவரி1 என்றிவை நான்கும் ஏறெனற் குரிய இளம்பூரணம் : (இ-ன்) பன்றி முதலாகிய நான்கும் ஆனினை ஏறென்று கூறலாமென்றவாறு. சக. எருமையும் மரையும் பெற்றமும்.அன்ன..? இளம்பூரணம் : சூத்திரத்தாற் பொருள் விளங்கும். ச2. கடல்வாழ் கூறவும் ஏறெனப் படுமே.3 இளம்பூரணம் : (இ-ன்) கடல்வாழ் சுறாவின் ஆணினையும் ஏறெனலாகு மென்றவாறு. பேராசிரியம் : இம்மூன்று சூத்திரத்தான் ஒதிய எட்டுச்சாதியின்க் ஆண் பாலும் ஏறெனப்படும் (எ-று) 1. ஏறு - ஆண்மைப் பெயர். புல்வாய், உழை என்பன மானின் வகையைச் சார்ந்தன. கவரி-கவரிமான். 2. மரை - மரை என்னும் ஆ (காட்டுப்பசு). பசு அன்ன - புல்வாய் முதலியன போல ஏறு என்னும் ஆண் மைப் பெயருக்கு உரியன. 3. கடலில் வாழும் பெருமீனாகிய சுறாவின் ஆண், ஏறு என் னும் ஆண்மைப் பெயரால் வழங்கப்படும் என்பதாகும். 4. எட்டுச்சாதி எனப்பட்டன. பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், கடல்வாழ்சுறவு என்பன. இவை ஏறு என்னும் ஆண்பாற் பெயருக்கு உரியன.