பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿鲁 தொல்காப்பியம் ' காற்றுச்சுவ டொற்றுக் கடிபுனங் கவரு மேற்றிளம் பன்றியி னிருளை வெரூஉம்' என வும், ' வெருளேறு பயிரு மாங்கண்' (அகம் : 121 ! எனவும், பொரிமலர்ந்தன்ன பொறியமை மடமான் திரிமருப் பேறொடு தேரறேர்க் கோட” (கலி: 13) எனவும், ஏற்றிளங் கவரி யெரியென வெருவப் பூத்த விலவத்துப் பொங்க ரேறி' எனவும், ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு’ (கலி:103) எனவும், ' வரிமாற் பாவை மரையேறு கறிக்கும்’ எனவும், “ புலம்பயி ரருந்த வண்ண னல்லேறு (குறுந் :344) எனவும், 'சுறவே றெழுதிய மோதிரந் தொட்டாள்' (கலி:84) எனவும் வரும். பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) பன்றி, புல்வாய், உழை, கவரி என்னும் நான்கின ஆண்களும் ஏறு என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயரால் வழங்குதற்கு உரியன எ-று. (Po) (இ-ள்) எருமை, மரை, பெற்றம் என்பனவும் ஏறு' என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயரால் வழங்குதற்குரியன எ-று. (சக) (இ-ள்) கடலில் வாழும் சுறாமீனும் ஏறு என வழங்கப் படும் எ-று. (பாடம்) பொறிய மடமான்'