பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 懿篮 பன்றி, புல்வாய், உழை, கவரி. எருமை, மரை, பெற்றம் சுறா என்னும் இவ்வினத்துள் ஆனினை ஏறு என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயரால் வழங்குதல் உண்டு என்பது, மேற் குறித்த மூன்று சூத்திரங்களாலும் உணர்த்தப்பட்டது. (ச2) சங். பெற்றம் எருமை புலிமரை புல்வாய் மற்றிவை எல்லாம் போத்தெனப் படுமே இளம்பூரணம் : (இ-ன்) பெற்ற முதலாகிய ஐந்துள் ஆணினையும் போத் தெனலாகு மென்றவாறு. சச. "நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரியப் இளம்பூரணம் : (இ-ன்) நீருள் வாழும் முதலை முதலாயினவற்றுள் ஆண்பால் போத்தெனக் கூறுதற்குரிய என்றவாறு. சடு, மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும். இளம்பூரணம் : (இ-ள். மயிலுள்ளும் எழாலுள்ளும் ஆணினைப் போத் தென்றல் பெரும்பான்மை என்றவாறு2 . . (இ-ள்) போத்தென்னும் பெயர் இப் பதின்மூன்று சாதியின் ஆண்பாற்கு முரியது (எ-று) போத்து-ஆண்மைப் பெயர். நீர் வாழ்சாதி-நீருள் வாழும் முதலை முதலியன. 1. அது பெறற்கு உரிய-போத்து என்னும் அவ் ஆண்மைப் பெயரைப் பெறுதற்கு உரியன. “நீர்வாழ் சாதியுள் அறுபிறப் புரிய எனப் பாடங்கொண் டார் பேராசிரியர். 2. ஆணினைப் போத்து என வழங்குதல் மயிலுள்ளும் எழா லுள்ளும் பெரும்பான்மை என்பதாம். எழால்-வல்லுறு.