பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻爱 தொல்காப்பிகம் 'மற்றிவை யெல்லா மென்றதனாற் பன்றியும் ஒத்தியும் முதலாயினவுங் கொள்ளப்படும். நீர்வாழ்சாதியுள் அறுபிறப் 1சுறாவும் 2முதலையும் 3இடங்கருங் கேரா மும் 3வராலும் வோனையுமென இவை." - (பயிலத் தோன்று மென்றதனானே நாரை முதலியனவுங் கொள்க. மற்றிவை பயிலத்தோன்றுமெனிற் சூத்திரம் வேறு செய்ததென்னை? முதற்குத்திரத்துள் எண்ணுக பிறவெனின், இவை பறவையுட் பயிலத்தோன்றுமாகலின் வேறோ தினா னென்க.2 'எறிஉேசாத்து உழுபோத்து, எருமைப் போத்து’ எனவும், புலிப்போத் தன்ன புல்லணற் காளை' (பத்துப், பெரும்பாண் ; 138) எனவும், மரைப்போத்து’’ எனவும், ' கவைத்தலை முதுபோத்து காலி னொற்றி தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகும்’ (குறுத் : 213) எனவும் வரும். 'எல்லா மென்றதனாற் பன்றிப்போத்தெனவும் வரும் 'முதலைப் போத்து முழுமீ னாரும்’ (ஐங்குறு 5) எனவும், 1. இங்கே குறிக்கப்பட்ட அறுபிறப்பாவன நீரில் வாழும் உயிரி னங்களாகிய சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்பன. இவற்றுள் முன்னுள்ள நான்கும் முதலை வகை பின்னுள்ள இரண்டும் மீன்வகை. 2. போத்து என்னும் ஆண்பாற்பெயர் பறவையினத்துள் பல விடத்தும் பயின்று வழங்குவதாதலின் இதனைத் தனித்த சூத்திரத்தால் வேறு கூறினார் ஆசிரியர்.