பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藍盛 தொல்காப்பியம் (இ-ள்) நீரில் வாழும் இன மாகிய முதலை முதலாயின வும் (ஆண்மை பற்றிய போத்து' என்னும்) அம்மரபுப் பெயரி னைப் பெறுதற்கு உரியன எ-று. அது என்றது, போத்து’ என மேற்குறித்த மரபுப் பெய ரினை, நீர் வாழ் சாதியுள் அறுபிறப் புரிய' எனப் பாடங் கொண்டார் பேராசிரியர். அப்பாடத்திற் கேற்ப நீர்வாழ் சாதி யுள் அறுவகைப் பிறப்பினவாகிய ஆண்களும் (போத்து என்னும் அம்மரபுப் பெயரைப் பெறுதற்கு) உரியன” எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். (சச) (இ- ள்) மயில் இனத்துள்ளும் எழால்’ என்னும் பறவை யினத்துள்ளும் போத்து என்னும் ஆண்மைப் பெயர் பெரும்பான் மையாய் வழங்கும் எ-று. இவை பறவையினத்துள் பயின்று வழங்குதலின் வேறு கூறினர் என்பர் போரசிரியர். எழால் - வல்லுறு என்னும் பறவை. புல்லுறு எனவும் கூறுவர். சவளான், இராசாளி என்பது வழக்கு என்பது, முன்பதிப்பில் மன்னார்குடி இயற்றமிழாசிரியர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய அடிக்குறிப்பு. விலங்கு, நீர்வாழ்வன. பறவை என்னும் மூவேறு இனங் களும் போத்து என்னும் ஆண்பாற் பெயர் கொள்வன என்பார் இனம்பற்றி மூன்று சூத்திரங்களாற் கூறினார். (சடு) சசு. இரலையும் கலையும் புல்வாய்க் குரிய. இளம்பூரணம் : (இ-ள்) இரலை என்னும் பெயரும் கலை என்னும் பெய ரும் புல்வாயில் ஆண்பாற்குரிய என்றவாறு. சஎ கலையென் காட்சி உழைக்கும் உரித்தே நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும். இளம்பூரணம் : (இ-ள்) கலை என்னும் பெயர் உழைக்கும் முசுவிற்கும் உரித்தென்றவாறு. 1. இதனை இரண்டு சூத்திரமாகக் கொண்டார் பேராசிரியர் முசு - குரங்கு.