பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் §§ பாற்றன்மை இலவென்பது கொள்க. எனவே, செல்வேன்! ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படுமென்டிது. ஆய்வுரை : (இ-ன்) : சேவல் என்னும் ஆண்மை பற்றிய மரபுப்பெயர் சிறகுகளுடன் பொருந்திய பறவையினத்துள் ஆண்பாற்கெல்லாம் ஒப்பவுரியதாகும்; கரிய பெரிய தோகையினையுடைய மயில் அல்லாத விடத்து எ-று. w இங்குச் சிறகு என்றது, சிறகினையுடைய பறவையினத் தினைக் குறித்து நின்றது; சினையாகுபெயர். 'மாயிருந்துளவி மயில் என அடைபுணர்த் தோதினமையால், விரிந்த தோகை யினையுடைய ஆண்மயில்கள் பெண்மைக்குரிய சாயலினைப் பெற்றமையால், அவை தோற்றத்தால் ஆண்மையினின்றும் வேறுபட்டுக் காணப்படுதலால் சேவல் என்னும் ஆண்மை குறித்த மரபுப்பெயரால் வழங்கப் பெறாவாயின என்பார் 'மாயிருந் து.ாவி மயிலலங் கடையே என்றார் ஆசிரியர். அல் கடை என்பது அலங்கடை யென்றாயிற்று. அல்கடை-அல்லாதவிடத்து. 'மாயிருந்துாவி மயில்' என்றதனான், அவை தோகையுடைய வாகிப் பெண்போலும் சாயல ஆகலான் ஆண்பாற்றன்மை இல என்பதுகொள்க' என்றார் பேராசிரியர். 'செவ்வேள் ஊர்ந்த மயிற்கு ஆயின் அது(சேவல் என்ற பெயர்) நேரவும் படும்’ எனப் பேராசிரியர் கூறும் அமைதி பிற்காலஇலக்கியவழக்கினைத் தழுவிக் கொள்ளும் கருத்தினதாகும். (சக) 0ே. ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப. இளம்பூரணம்: (இ-ன்) ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் ஏற்றை" யென்னும் பெயர் உரித்தென்றவாறு. 1. செவ்வேளாகியமுருகப்பெருமான் ஊர்ந்து நடத்தும்மயிலாகிய ஊர்தி தோற்றத்தாற் பெண்பால் போலும் சாயலுடையதா யினும் பேர்ரில் மீதுர்ந்து செல்லும் பேராண்மையுடையதா தலின் அதற்குச் சேவல் என்னும் ஆண்பாற்பெயர் பொருத்த முடையதாம் என்பார்,செவ்வே ளுர்ந்த ம்யிற்கு ஆயின் அது வும் (சேவற்பெயரும்) தேரவும் படும்' என்றார்"பேராசிரியர். 2. ஏற்றை-ஆண்மைப்பெயர்,