பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தொல்காப்பியம் --- -- ---------- ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக் கண்ணும் கொள் ளப்படும்." பேராசிரிகம் : (இ-ள்) ஏற்றையென்னுஞ் சொல் ஆற்றலொடு கூடிய ஆண்பாற்கெல்லாம் உரித்து (எ-று). ஆல்ை , ' குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை' (ஐங்குறு 216 நற் 36 : குறுந் 141) எனவும், ' செந்தா வேற்றை கம்மென வீர்ப்ப’’ (அகம் 1112 எனவும், ' கொடுந்தாண் முதலைக் கோள்வ லேற்றை' (குறுந் : 324) எனவும் வரும், பிணர்மோட்டு நந்தின் பேழ்வா யேற்றை' (அகம் : 246) எனவும், புன்றாள் வெள்ளெலி மோவாuேற்றை' (அகம் : 1.33) எனவுங் கூறினார். அவையும் அப்பெயரானே வழங்குதல் ஆற்றலுடையவாகத் தோன்றும். எல்லா மென்றதனாற் சிறுபான்மை ஆற்றல் இல் லாதனவுங் கொள்க. "இடுகாட்டு ளேற்றைப் பனை' என்பது போன்று வருவன; பிறவும் அன்ன. 1. ஏற்புழிக் கோடல் என்பதனான் அஃறிணைக்கண் கொள்ளப் படும்' என இத்தொடர் இருத்தல் பொருத்தமாகும். இவ்வியல் கடு முதல் 0ே வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைக்குரிய ஆண்மைப் பெயர்களே கூறப்படுதலின் இங்குக் கூறப்பட்ட விதிகள் ஏற்புழிக்கோடல் என்பதனால் அஃறிணைக் கண் கொள்ளப்படும்.