பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுரை : (இ-ள்) ஆற்றல்மிக்க ஆண்பாலாகிய உயிரினத்துக்கெல் லாம் ஏற்றை என்னும் ஆண்மைப்பெயர் பொதுவாக வழங்கு தற்கு உரியதாகும் எ-று! பிறப்பினால் ஆண்பாலாயினும் ஆற்றலொடு கூடிய உயிரினத்துக்கே ஏற்றை என்னும் ஆண்மைப்பெயர் சிறப்புரிமை யுடையது என வற்புறுத்துவார் ஆற்றலொடு புணர்ந்த ஆண் பாற்கெல்லாம் என அடைபுணர்த்தோதினார். 'பன்னாள், குழிநிறுத் தோம்பிய கொடுத்தாள் ஏற்றை ' (பெரும்பாண் : 343,344) (பன்றி) ஆற்லொடுபுணர்ந்த ஆண்பா லாதலின் ஏற்றை என்றார், எனவும் ஏற்றை அரிமான், (சீவக-432) ஏறும் ஏற்றையும்’ (தொல்-மரபு: 2) என்றலின் ஏற்றையும் பெயர்' எனவும் இச்சூத்திரத்தை எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். எனவே ஏறு' என்பதும் ஏற்றை' என்பதும் ஆண்மை குறித்த இருவேறு மரபுப்பெயர் என்பது புலனாம். 1. ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம், ஏற்றை என்னும் மரபுப்பெயர் உரியதாய் வழங்கும் என்பதனை, பன்னாள், குழிநிறுத் தோம்பிய குறுந்தாளேற்றை'342) (பெரும்பாண் - எனப் பன்றிக்கும், ஏற்றை அரிமான் இடிபோல இயம்பி னானே' (சீவக - 432) எனச் சிங்கத்திற்கும், ' கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை” (பட்டினப்-140) என வேட்டை நாய்க்கும்

  • பரற்றவ ழுடும்பின் கொடுந்தா ளேற்றை'

- (மலைபடு - 508) என உடும்பிற்கும் வழங்கப்படும் இலக்கியச் சான்றுகளுடன் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளமை காணலாம். ' கூருணகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை' (பட்டினப்-140) எனவும்,