பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் *3 ஏற்றை எனப்படும்; கவரியுள் ஆண் ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; எருமையுள் ஆண் ஒருத்தல், போத்து, ஏற்றை, கண்டி எனப்படும்; சுறவில் ஆண் ஏற்றை எனப்படும்; பெற்றத் துள் ஆண், போத்து, ஏறு, ஏற்றை எனப்படும்; எருது காலுறா திளையர் கொன்ற என வருதலின் எருதும் ஆம்; அதிகாரப் புறனடையாற் கொள்க. நீர்வாழ் சாதியுள் ஆண், வராற் போத்து, வாளைப்போத்து என வரும். முசுவில் ஆண் கலை எனப்படும்; குரங்கும், ஊகமும் இவ்வாறே கொள்ளப்படும்; கடுவன் எனவும் வரும். ஆட்டினுள் ஆண் மோத்தை, தகர், உதள், அப்பர் என வரும்; புள்ளினுள் மயிலாண் ஆண் எழால், சேவல், போத்து, ஏற்றை எனப்படும்; புள்ளினுள் ஆனெல்லா வற்றிலும் மயிலல்லாதனவெல்லாம் சேவல், ஏற்றை எனப்படும்; ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப் பனை, ஆண் பனை எனவரும். பேராசிரியம் : இது, மேற்கூறிய ஆண்பாற் பெயர்க்கும் இனிவரும் பெண்பாற் பெயர்க்கும் புறனடை. (இ-ன்.) ஆணென்னுஞ் சொல் எல்லாச் சாதியுள்ளும் ஆண்பாற்கு உரித்து பெண்ணென்னுஞ்சொல் எல்லாச் சாதி யுள்ளும் பெண்பாற்கு உரித்து; வழக்கினுள் அவ்வாறு காணப் படும் அவை (எ-று). அவை ஆண்யானை, பெண்யானை, ஆண்குரங்கு, பெண் குரங்கு; ஆண்குருவி, பெண்குருவி என்றாற்போல்வன இவை காணப்படும். எனவே, இத்துணை விளங்கவாராது சிறுவரவி னான் வருவனவுமுள இருபாலு மல்லாதனவென்பது. ஆணலி, பெண்ணலி எனவும், ஆண்பனை, பெண்பனை எனவும் வரும்;1 பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) ஆண்பால் உயிர்களெல்லாம் ஆண் எனப் பெயர் பெறுவன; பெண்பால் உயிர்களெல்லாம் பெண் எனப் பெயர் 1.Tgmīšing giru೯೯r@jp, காய் ஈனும் பனையினைப் பெண்பனையென்றும், ஆண் பெண் என்னும் இரும்பாலுமல்லாத பால்திரிபெயரினை பாலின் மிகுதி குறைவு பற்றி ஆணலி பெண்ணலி யென்றும் வழங்குதல் மரபு என்பது இவ்வுரைத் தொடராற் புலனாகும்.