பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 4 தொல்காப்பியம் பெறுவன: அவ்விருவகைக்கும் உரிய வடிவ வேற்றுமை காணப் படுதலால் எறு. இச்சூத்திரத்தில் ஆண், பெண் என்பன அஃறிணைக்கு உரியவாகக் கூறப்பட்டன. மரபியல் நடு முதல் டுக முடிய ஆண்மைபற்றிய மரபுப் பெயர்களை வகுத்துரைத்தார். சே, கடுவன், கண்டி என்பன ஆண்பெயர். அவற்றுள் 'சே' என்பது பசுவினுள் ஆணினையே குறித்து வழங்குதலின் அதனைத் தனியே கூறிற்றிலர். ஏனையிரண்டும் இவ்வியல் அதிகாரப்புறனடையில் (கு-சுகூ) விரித்துரைக்கப்படும். (டுக) டுடி. பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. இளம்பூரணம் : இனிப் பெண்பெயர் உணர்த்துகின்றார் இச்சூத்திர முதலாக . (இ.ஸ்) பிடி என்னும் பெண்பெயர் ஆனையின் மேலது என்றவாறு, பேராசிரியம் : இது முறையானே மூன்றாம் எண்ணு முறைமைக்கணின்ற பெண்மைப்பெயர் கூறிய தொடங்கி ஆண்பாவிற் களிறு முற் கூறியவாறு போலப், பிடியினை முற்கூறியது! (இ- ள்) பிடியென்னும் பெயர் யானைக் கண்ணது (எ-று) 'பிடிபடி முருக்கிய பெருமரப் பூசல்” (அகம் : 8) என வரும். பெயரென்றதென்னை யெனின், அவை தொடங்கு கின்றதென்பது அறிவித்தற்கென்பது. இவ்வியல் ருஉ முதல் சுஅ வரையுள்ள சூத்திரங்களால் பெண்மை பற்றிய மரபுப்பெயர் கூறுகின்றார். பெண் பெயர் - பெண்மை குறித்த மரபுப்பெயர் 1. விலங்குகளிற் சிறந்தது யானை. அதற்குரிய களிறு என்னும் ஆண்பாற் பெயரை முன்னர்க் கூறியவாறு போன்று, அதற் குரிய பெண்பாற் பெயராகிய பிடி என்பதனையும் முன் னெடுத்து மொழிந்தார் ஆசிரியர்.