பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 79 'அளகுசேவலோடாடி (சீவக - 1778) எனவரும் பாட லுரையில், அளகு-கூகை; காட்டுக்கோழியும் ஆம்” என்றார் நச்சினார்க்கினியர். (டுசு) (இ-ள்) அளகு' என்னும் பெண்மைப் பெயரால் வழங்கப் பெறும் உரிமை ஒரோவழி மயிலுக்கும் உரியதாகும் எ-று. (டுள) டுவு. புல்வாய் நவ்வி உழையே கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே, இளம்பூரணம் : (இ-ஸ்) புல் வாய் முதலாகிய நான்கிற்கும் பிணை? என்னும் பெண்மைப்பெயர் வழங்குதற்குரித்து என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) பிணையென்னும் பெண்பெயர்க்குரியன இவை நான்கும் (எ-று). 'அலங்கல் வான் கழை புதிர்நென் னோக்கிக் கலையினை விளிக்குங் கானத் தாங்கண்' (அகம் : 129) எனவும், 'சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பினை (புறம் : 2) எனவும், 1. அளகுடைச் சேவல் (பதிற்றுப்பத்து. 35) ஈண்டுப்பருந்து' என்றார் பழையவுரையாசிரியர் பெரியபுராணம் திரு நாளைப் போவார்புராணம் 7 - ஆம்பாடலிலும் திருவிளை யாடல் அருச்சனைப் படலம் 34 ஆம் பாடலிலும் அளகு என்னும் பெயர் ஆண்கோழியைக் குறித்து வழங்கியுள்ளது. எனவே அளகு' என்பது பிற்காலத்தில் பலபொரு ளொரு சொல்லாய் வழங்குவதாயிற்றுtஎனக் கொள்ளுதல் ஏற்புடைய தாகும். மரபியல் டு-ைஆம் சூத்திரத்தில் முதலடியாகப் பெண்பாலான என்ற தொடர் இளம்பூரணருரையிற் காணப்படுகின்றது. இத்தொடர் பேராசிரியருரையில் இல்லாமை குறிப்பிடத் தக்கது. 2. பிணை என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர்.