பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿爵 தொல்காப் பியம் சிறுதலை நவ்விப் பிணையிற் றிரிந்த தெறிகோட்டு ;、°” (குறுந் : 183 \ எனவும, கவரி மான்பினை நரந்தங் கனவும்' (பதிற்-1” எனவும் வரும். 'சொல்வாய் நாடித் பிணையெனப் படுமே” என்பது பிணையென்னுஞ் சொற்பொருளினை உண்மை நோக் கிற் பிரியாது பிணையும் பிற சாதிக்குஞ் சேவற்குஞ் செல்லுமாயி னும், மரபுநோக்கப் பிணையென்றதற்குச் சிறப்புடையன இவை என்றவாறு' ஆய்வுரை : (இ-ள்) புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் நான்கிற் கும் சொற்பொருளமைப்பினை ஆராய்ந்தால் பிணையென்னும் பெண்மைப்பெயர் உரியதாகும் எவறு. சொல்வாய் நாடுதலாவது, சொல்லில் இடம் பெற்றுள்ள பொருட்பகுதியை ஆராய்தல். பிணையென்னும் மரபுப்பெயரின் 'உட்பொருளை உள்ளவாறு ஆராய்ந்தால், தானே தனித்துப் பிரிந்து செல்லாது தன் துணையாகிய ஆணுடன் பிணைந்து கூடிச் செல்லும் பெற்றியினையுடைய பெண்மைப் பெயராக வழங்கும் மரபு புலனாதலின் சொல்வாய் நாடிற்பிணையெனப் படுமே என்றார் ஆசிரியர். (டு.வு) டுக. பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பினவென் பெயர்க்கொடை, இளம்பூரணம் : (இ.ஸ்) பன்றி முதலாகிய மூன்றிற்கும் பெண்பாற்குப் பின வு? என்னும் பெயர் பொருந்திற்று என்றவாறு. 1. பிணை என்னும் பெயர் பிரியாது பிணைந்து செல்லும் இயல் புடைய பிற சாதியுயிர்கட்கும் சேவற்கும்செல்லுமாயிலும்வழக் கியல் மரபு நோக்க இப்பெயர் புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் இவற்றிற்குச் சிறப்புரிமையுடையன என்பதாம். 2. பினவு என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர்,