பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரையியல் § { பேராசிரியம் : (இ-ள்) இவை மூன்று சாதியும் பிணவென்னும் பெயர்க் குரியன (எ-று). 'நெடுந்தாட் செந்தினைக் கெழுந்த கேழல் குறுந்தாட் பினவொடு குறுகல் செல்லாது” எனவும், - 'குறியிறைக் குரம்பைக் குறத்தி யோம்பிய மடநடைப் பினவொடு கவர்கோட் டிரலை" எனவும், "நாய்ப்பின வொடுங்கிய கிழநரி யேற்றை” எனவும், மென்புனிற் றம்பினவு பசித்தெனப் பசுங்கட் செந்நா யேற்றைக் கேழ றாக்க’ (அகம் : 21) எனவும் வரும். ஒன்றிய என்றதனான். ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களை இய’ (அகம் : 72) எனப் புலிக்குங் கொள்க; பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ள்) பன்றி, புல்வாய், நாய் என்னும் விலங்கினம் மூன்றும் பிணவு என வழங்கும் பெண்மைப் பெயருக்கும் பொருத்த முடையன என்பர் ஆசிரியர் எ-று. பிணவு என்னும் பெண்மைப்பெயர் யானைக்கும் (பரி பாடல் 10 5), கரடிக்கும் (மணிமேகலை 16 : 68), குரங்குக்கும் (மணிமேகலை 19 : 72), வழங்குதல் தொல்காப்பியனார் காலத் திற்குப் பிற்பட்ட இலக்கிய மரபாகும். "பன்மயிர்ப் பிணவொடு கேழலுகள' (மதுரை-174)என வரும் மதுரைக் காஞ்சியடிக்குப் பல மயிரினையுடைய பெண்பன்றி 1. ஒன்றிய என்பதனான் பிணவு' என்னும் பெயர், - 'ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய (அகநானூறு-72) எனப்புலிக்கும், பரிபாடல் 10ஆம் பாடலில் யானைக்கும் ம மேகலை 19-ஆம் காதையில் குரங்குக்கும் உரியதாய் வருதல் கொள்க.