பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恐垒 தொல்காப்பியம் விடினும், அச்சூத்திரத்தில் அந்தஞ்சான்ற என்ற இலேசினால் தழுவிக் கொள்ளப்பட்டது. அங்ஙனம் தழுவிக் கொண்டமை பற்றியே அம்மரபுப் பெயரினை சிெரியர் இங்கு வகுத்துரைக் கின்றார் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும். (கூக) சுஉ. பெண்ணும் பிணவு மக்கட் குரிய, இளம்பூரணம் : (இ-ன்) பெண்ணென்னும் பெயரும் பினவு என்னும் பெயரும் மக்களிற் பெண்பாற் குரித்து என்றவாறு. பேராசிரியம் . (இ ள்) பெண்ணும் பினாவும் உயர்தினைப் பெண்மைக் குரிய" (எ-று). பெண்ணென்பது, 'பெண்பள் லெல்லாம் பெண்ணெனற் குரிய' (தொல். மர : 50) என்றமையின், ஈண்டுக் கூறுதலின் மிகையாம் பிறவெனின், அற்றன்று; அச்சூத்திரம் அஃறிணை யதிகாரமாகவின், ஈண்டு விதந்தோதினானென்பது. ஒன்றென முடித்த (565) லென்பத னான், உயர்தினை ஆணென்பதும் ஈண்டே கொள்ளப்படும். பெண்கோ ளொழுக்கங் கண்கொள நோக்கி’ (அகம் : 112) எனவும், 'ஈன்பின வொழியப் போகி'2 (பெரும்பாண் : 90) எனவும் வரும் 1. இவ்வியல் டுக-ஆம் சூத்திரத்தில் எடுத்துாைக்கப்பட்ட பெண், ஆண் என்பன அஃறிணைப்பெயர். இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட பெண் பினா என்பன பெண்கோளொ ழுக்கமும் கண்கொள நோக்கி’ (அகநானூறு 112) எனவும். 'கோயிற்பினாப் பிள்ளைகாள்' (திருவாசகம், திருவெம் பாவை) எனவும் உயர்திணைக்கண் வந்தன. . 2. 'ஈன்பின வொழியட் போகி (பெரும்பாண்-90) என் புழிப் 'பினா’ என்னும் ஆகார வீற்றுச்சொல் வருமொழி வன்கண மன்மையிற் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது பிண’ என அகரவீற்றாய் நின்றது.