பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 85 'ஆண்கட னாகலிற் பாண்கட னாற்றிய (புறம் : 201) என ஆணென்பது உயர்திணைக்கண் வந்தது. பிறவும் அன்ன. பினாவென்னும் ஆகாரவிறுதி வன்கணமன்மையிற் குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம்பெறாது நின்றாது. மக்கட்குரிய வெனவே, உரியவன்றித் "துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தென’’ (அகம் : 146) எனப் புலி முதலியன வற்றிற்குங் கொள்க. ஆய்வுரை : (இ-ள்) பெண் என்னும் பெயரும் பிணவு என்னும் பெயரும் மக்களினத்திற் பெண்பா ற்குரிய மரபுப் பெயர்களாம் எ - று , "பெண்ணும் பினாவும் மக்கட்குரிய" என்ற பாடம் கொண் டார் பேராசிரியர். பினா என்னும் ஆகார விகுதி (வருமொழி) வன்கண மன்மையின் குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம் பெறாது பினா என) நின்றது' எனப்பேராசிரியர் தரும் விளக்கம், பிணா என்னும் ஆகாரiற்றுச் சொல்லே குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம் பெற்றுப் பிணவு எனவும் வழங்கும் என்பதனைச் சுட்டி நிற்றலால், இளம்பூரணர் உரையிற் காணப் படும் பினவு’ என்ற பாடமும் பேராசிரியர் உரையிற் காணப் படும் பிணா என்ற பாடமும் ஒரு பெயரின் இருவேறு நிலையே என்பது நன்கு தெளியப்படும். கோயிற் பினாப்பிள்ளைகாள் (திருவெம்பாவை) எனத் திருவாசகத்தில் பினா என்னும் பெண்மைப்பெயர் மக்கட் குரியதாக வழங்கியுள்ளமை காண்க. (品e〉 சுங், எருமையும் மரையும் பெற்றமும் நாகே. இளம்பூரணம் : (இ-ள்) எருமை முதலாகச் சொல்லப்பட்ட மூன்றிற்கு" நாகு' என்னும் பெண்பெயர் உரித்து என்றவாறு. 1. நாகு என்பது பெண்மை பற்றிய மரபுப்பெர்